Categories: சினிமா

லோகேஷ் கனகராஜூக்கு அந்த ஆபத்து இருக்கு.. கூலியோட ரஜினி காலி.. பிரபலம் தடாலடி பேட்டி..!

Spread the love

தமிழ் சினிமாவில் மாநகரம் என்ற திரைப்படத்தில் தனது திரை வாழ்கையை ஆரம்பித்த லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து பல ஹிட் திரைப்படங்களை கொடுத்து தமிழ் சினிமாவின் மோஸ்ட் வான்டெட் இயக்குனர்களில் ஒருவராக வலம் வருகிறார். மாநகரம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி அவர்களை வைத்து கைதி என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார்.

இந்த திரைப்படத்திற்கு பின்பு விஜய்யை வைத்து மாஸ்டர், கமல்ஹாசனை வைத்து விக்ரம் பின்னர் மீண்டும் விஜயை வைத்து லியோ என அடுத்தடுத்து ஹிட் திரைப்படங்களைப் கொடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது ரஜினிகாந்த் அவர்களை வைத்து தலைவர் 171 என்ற திரைப்படத்தை இயக்க இருக்கின்றார். இப்படத்தின் டைட்டில் நேற்று வெளியானது, இந்த படத்திற்கு கூலி என பெயரிடப்பட்டுள்ளது. மேலும் இந்த திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இப்படத்திற்கு அனிருத் இசை அமைக்கின்றார்.

தொடர்ந்து இப்படத்தில் அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் வலைப்பேச்சு பிஸ்மி பேட்டி ஒன்று சில தகவல்களை கூறியிருக்கின்றார். அதாவது லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து ஒரே மாதிரியான படங்களை இயக்கினால் தமிழ் சினிமாவில் இருந்து விரைவில் காணாமல் போய்விடுவார். இதற்கு முன்னதாக பல இயக்குனர்கள் ஒரே சாயலில் திரைப்படத்தை எடுத்த காரணத்தினால் தமிழ் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்கள்.

அதனை லோகேஷ் கனகராஜ் மாற்றிக் கொண்டால் கட்டாயம் தமிழ் சினிமாவில் நீடிக்கலாம் இல்லையென்றால் அந்த இயக்குனர்களில் ஒருவராக இவரும் மாறி விடுவார் என்று தெரிவித்திருந்தார். மேலும் ரஜினிகாந்த் முன்பெல்லாம் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வந்தார். முரட்டுக்காளை என்ற மசாலா திரைப்படத்தில் நடித்தது முதல் அது போன்ற திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி நடிக்க தொடங்கி விட்டார்.

ஆனால் அவருக்கு உண்மையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டும் என்பது மிகப்பெரிய ஆசை என தெரிவித்திருந்தார். ஆனால் அதுபோன்ற படங்களில் நடிக்கும் போது ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்வார்களா? என்று யோசித்து தவிர்த்து விடுகிறார். மேலும் நம்மை வைத்து மிகப்பெரிய பட்ஜெட்டில் படங்களை எடுக்கும்போது தயாரிப்பாளர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என்பதற்காக சிகரெட் குடிப்பது, கஞ்சா அடிப்பது, சரக்கு அடிப்பது போன்ற காட்சிகளில் நடிக்கிறார்கள் என பிஸ்மி ஓப்பனாக பேசியிருந்தார்.

Mahalakshmi

Recent Posts

இன்னும் இரண்டே நாளில்… புதிய கட்சி குறித்து அண்ணாமலை போட்ட குண்டு… அதிர்ச்சியில் பாஜக..!!!

சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட முக்கியக் கேள்விக்கு, இன்னும் இரண்டு…

3 மணத்தியாலங்கள் ago

Big Breaking: பாஜகவிற்கு திமுக திடீர் ஆதரவு… தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்..!!

தொகுதி மறுசீரமைப்பு மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகிய இரு முக்கிய மசோதாக்களையும் மீண்டும் கொண்டு வர பாரதிய…

3 மணத்தியாலங்கள் ago

Breaking: பெண்களுக்கு மகிழ்ச்சி செய்தி… அறிவித்தார் முதல்வர் விஜய்..!!

பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக "சிங்கப்பெண் அதிரடிப்படை" என்ற புதிய திட்டம் வரும் வாரத்தில் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக முதலமைச்சர் விஜய்…

3 மணத்தியாலங்கள் ago

“என் மனைவிக்கு ஏதாவது ஆச்சுன்னா யார் பொறுப்பு?”.. பிரசவ வலியோடு தவித்த பெண்.. நடுரோட்டில் கதறிய கணவன்.. பெங்களூருவை உலுக்கிய விஐபி அராஜகம்..!!

விஐபி (VIP) கலாச்சாரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்களின் வருகைக்காகச் சாலைகள் முடக்கப்படுவதும், அதனால் சாதாரண ஏழை, எளிய மக்கள்…

4 மணத்தியாலங்கள் ago

“டெல்லியில் விற்கப்படவிருந்த பச்சிளம் குழந்தை.. வெறும் 48 மணி நேரத்தில் கிளைமாக்ஸை மாற்றிய ‘கெத்து’ ஐபிஎஸ்.. நெஞ்சை பதறவைக்கும் பின்னணி”..!!

டெல்லியில் 5 லட்சம் ரூபாய்க்கு விற்கப்படவிருந்த ஒன்றரை வயது பச்சிளம் குழந்தை, வெறும் 48 மணி நேரத்திற்குள் மீட்கப்பட்டு இன்று…

4 மணத்தியாலங்கள் ago

“துர்நாற்றம் வீசிய சமோசா.. ஒரே ஒரு புகாரில் விழுந்த ₹25,000 இடி.. தட்டிக்கேட்ட யூடியூபருக்கு கொலை மிரட்டல்.. ரயிலில் நடந்த பகீர் சம்பவம்”..!!

பிரபல யூடியூபரான சர்பராஸ் என்பவர் ரயிலில் பயணம் செய்தபோது, அங்கிருந்த வியாபாரி ஒருவரிடம் 30 ரூபாய் கொடுத்து இரண்டு சமோசாக்களை…

4 மணத்தியாலங்கள் ago