Categories: CINEMA

அடடே…. ஐஸ்வர்யா ராய் பாட்டை, ஐஸ்வர்யா ஷங்கருக்கு வழங்கிய வைரமுத்து.. வைரலாகும் ட்விட்டர் பதிவு…

தமிழ் திரையுலகில் புகழ்பெற்ற பாடல் ஆசிரியராகவும், கவிஞராகவும் வலம் வந்தவர் கவிஞர் வைரமுத்து. இவர் ஆறு முறை தேசிய விருதும், கலை மாமணி விருதும், பத்மஸ்ரீ விருதும் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. கவியரசு, கவிப்பேரரசு போன்ற பட்டங்களையும் பெற்றவர். 80ஸ் தொடங்கி தற்பொழுது வரை வைரமுத்து அவர்களின் வரிகளுக்கென்று தனி ரசிகர்கள் கூட்டம் இருக்கத்தான் செய்கின்றனர்.

இவர் இயற்றிய பல பாடல்களுக்கு தேசிய விருது கிடைத்ததும் குறிப்பிடத்தக்கது.  தற்பொழுதும் இவர் பல திரைப்படங்களுக்கு பாடல்களை எழுதி வருகிறார். இதுமட்டுமின்றி அவ்வப்பொழுது இவர் செய்யும் ஒரு சில செய்கைகள் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறது.

இந்நிலையில் இயக்குனர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யா ஷங்கருக்கு நேற்று இரண்டாவது திருமணம் நடைபெற்றது. உதவி இயக்குனர் தருண் கார்த்திகேயன் என்பவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைத்தார் ஷங்கர். இத்திருமண விழாவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ரஜினிகாந்த், கமல்ஹாசன், சியான் விக்ரம், சூர்யா, கவிஞர் வைரமுத்து உட்பட பல்வேறு பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

தற்பொழுது கவிஞர் வைரமுத்து திருமண விழாவில் மணமக்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை தனது ட்விட்டர்  பக்கத்தில் பகிர்ந்து, ‘அழகிய நிலவில் ஆக்சிஜன் நிரப்பி அங்கே உனக்கொரு வீடு செய்வேன். உன்னுயிர் காக்க என்னுயிர் கொண்டு, உயிருக்கு உயிரால் உறையிடுவேன். பால்வண்ணப் பறவை குளிப்பதற்காகப் பனித்துளி எல்லாம் சேகரிப்பேன்’  என  ஜீன்ஸ் படத்தில் இடம்பெற்ற அவர் எழுதிய ஐஸ்வர்யா ராய் பாட்டை, ஐஸ்வர்யா ஷங்கருக்கு வாழ்த்தாக வெளியிட்டுள்ளார். இதனை ரசிகர்கள் தற்பொழுது வைரலாக்கி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

சக்திவேல் சீரியல் நடிகைக்கு நிச்சயதார்த்தம்.. மாப்பிள்ளை யார் தெரியுமா..? குவியும் வாழ்த்துக்கள்..!

சக்திவேல் சீரியலில் நடித்து வரும் நடிகை சந்தியாவுக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ள நிலையில் இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி…

8 mins ago

ரொம்ப மிஸ் பண்றேன்..! அவர மாதிரி இன்னொருத்தரை பார்க்கவே முடியாது.. விஜயகாந்த்-தின் பத்மபூஷன் விருது குறித்து ரஜினி வெளியிட்ட வீடியோ..!

மறைந்த தேமுதிக தலைவரும் நடிகருமான விஜயகாந்த் மத்திய அரசு சார்பாக பத்மபூஷன் விருது வழங்கப்பட்டதை தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து…

1 hour ago

GOAT படத்திற்கு வந்த சோதனை.. அச்சச்சோ கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாம போச்சே..!!

வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் படத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படத்தில்…

2 hours ago

“சிவாஜியையே வியக்க வைத்த அமெச்சூர் நடிகர்… ஒனக்குள்ள இப்படி ஒரு திறமையா?” … வியந்து போய் விருந்து வைத்த நடிகர் திலகம்!

தமிழ் சினிமாவில் நடிப்பு என்றால் சிவாஜி கணேசன் என்ற பெயரை 25 ஆண்டுகளுக்கும் மேலாக தக்கவைத்து புகழின் உச்சியில் இருந்தார்.…

3 hours ago

RB சௌத்ரி கேட்டு ஓகே பண்ண எல்லா கதையும் ஹிட்டு… ஆனா விஜய் ஓகே பண்ண கதை ப்ளாப்- சினிமா பிரபலம் சொன்ன சுவாரஸ்ய தகவல்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் 90 களில் கோலோச்சிய தயாரிப்பாளர்களில் ஒருவர் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனர் ஆர் பி…

3 hours ago

கவுண்டமணி செந்தில் கூட்டணியைப் பிரித்த பிரபல இயக்குனர்… அதுக்கு அவர் சொன்ன காரணம்தான் ஹைலைட்டே!

தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக கவுண்டமணியோடு இணைந்து வெற்றிகரமாக வலம் வந்தவர் செந்தில். அவர்கள் இருவரும் இணைந்து நூற்றுக்கணக்கான திரைப்படங்களில்…

4 hours ago