மொத்த மகாபாரதத்தையும் இரண்டே வரியில் சொன்ன வைரமுத்து.. அட இந்தப் பாட்டா?.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே..!!

By Mahalakshmi

Updated on:

தமிழ் சினிமாவில் 1980களில் வெளியான நிழல்கள் என்ற திரைப்படத்தின் மூலமாக பாடலாசிரியராக அறிமுகமானவர் வைரமுத்து. இந்த திரைப்படத்தை தொடர்ந்து பல முன்னணி ஹீரோக்களான ரஜினி, கமல், பிரசாந்த், அஜித், விஜய், சூர்யா, தனுஷ் என பல நடிகர்களுக்கு பாடல்களை எழுதியுள்ளார். தன்னுடைய பாடல் வரிகள் மூலம் பல ரசிகர்களை கட்டிப்போட்டவர் வைரமுத்து.

1871227 vai

இவரின் பாடல்களை பலரும் தற்போது ட்ரோல் செய்து வருகிறார்கள். இவர் முதல் மரியாதை, கருத்தம்மா, பவித்ரா, ரோஜா, சங்கமம், கன்னத்தில் முத்தமிட்டால், தென்மேற்கு பருவக்காற்று உள்ளிட்ட படங்களுக்காக சிறந்த பாடலுக்கான தேசிய விருதை பெற்றிருந்தார். தன்னுடைய பாடல்கள் மூலமாக ரசிகர்களை கவர்ந்த இவர் தற்போது சினிமாவை விட்டு ஒதுங்கி இருக்கிறார்.

   

இவர் மொத்த மகாபாரதத்தையும் இரண்டே வரிகளில் கூறியிருக்கிறார். அதுவும் ஒரு பாடலில் அது வேறு எதுவும் கிடையாது.  நடிகர் விஜய் மற்றும் ஜோதிகா நடிப்பில் வெளிவந்த குஷி திரைப்படத்தில் தான். அந்த திரைப்படத்தில் ஒரு பொண்ணு ஒன்னு நான் பார்த்தேன் என்ற பாடலை நாம் அனைவரும் கேட்டிருப்போம். அந்த பாடலில் தான் இந்த வரிகள் இடம்பெற்றிருக்கும். “ஒரு பொண்ணு ஒன்னுனா பார்த்தேன்.. சென்டிமீட்டர் சிரிக்க சொல்லி கேட்ட.. அவ சிரிச்சா சிரிப்புல 100 பேரு செத்துப் போயிட்டான்” என்ற வரிகள் மூலமாக முழு மகாபாரதத்தையும் அடக்கி இருப்பார் வைரமுத்து.

author avatar
Mahalakshmi