Connect with us

என் ட்யூனுக்கெல்லாம் பாட்டெழுத முடியாது என மறுத்த வைரமுத்து… கடைசியில் அதுக்குதான் தேசிய விருது – இசையமைப்பாளர் பகிர்ந்த தகவல்!

CINEMA

என் ட்யூனுக்கெல்லாம் பாட்டெழுத முடியாது என மறுத்த வைரமுத்து… கடைசியில் அதுக்குதான் தேசிய விருது – இசையமைப்பாளர் பகிர்ந்த தகவல்!

 

தமிழ் சினிமாவில் கண்ணதாசனுக்குப் பிறகு ஒரு ஆளுமைமிக்க பாடல் ஆசிரியராக உருவானவர் வைரமுத்து. இளையராஜாவால் நிழல்கள் படத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட அவர் அதன் பின்னர் இளையராஜாவோடு இணைந்து பல பாடல்களை உருவாக்கி காலத்தால் அழியாத பல இனிமையான பாடல்களைக் கொடுத்தவர் வைரமுத்து.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் ஒரு கட்டத்தில் இந்த கூட்டணி பிரிந்தது.

   

இளையராஜா தான் இசையமைக்கும் படங்களில் வைரமுத்து இருக்கவே கூடாது என உறுதியாக இருந்தார். அதனால் ரஹ்மான் வரவு வரைக்கும் வைரமுத்து பல ஆண்டுகள் வாய்ப்பில்லாமல் போராடினார். ரஹ்மான் வந்த பின்னர் அவரின் செகண்ட் இன்னிங்ஸ் தொடங்கியது எனலாம்.

அதன் பின்னர் அவர் தன்னுடைய உச்சத்தைத் தொட்டார். அதனால் அவர் பல டிமாண்ட்களை இயக்குனர்களிடமும் இசையமைப்பாளர்களிடமும் வைக்க ஆரம்பித்தார். படத்தின் அனைத்து பாடல்களையும் நானே எழுதுவேன் உள்ளிட்டவை அதில் அடக்கம்.

இந்நிலையில் இசையமைப்பாளர் என் ஆர் ரகுநந்தன், தான் இசையமைப்பாளராக அறிமுகமான தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்துக்கு வைரமுத்துவை பாடல் எழுத வைக்க ஆசைப்பட்டாராம். ஆனால் அப்போது ரஹ்மான் உள்ளிட்ட முன்னணி இசையமைப்பாளர்களுக்கு மட்டுமே பாடல் எழுதி வந்த வைரமுத்துவின் அப்பாயின்மெண்ட் கிடைக்கவே இல்லையாம்.

எப்படியோ கெஞ்சி கூத்தாடி அப்பாயிண்ட்மெண்ட் வாங்கி படத்தைப் போட்டுக் காட்டியுள்ளனர். படம் பார்த்ததும் சமாதானம் ஆன வைரமுத்து ட்யூன்களை வாங்கி ஒரு வாரம் கழித்து பாடல்களை எழுதிக் கொடுத்தாராம்.  அந்த பாடல்களை பார்த்ததுமே இவை ஹிட்டாகும் என படக்குழுவினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

அந்த படத்துக்காக வைரமுத்து எழுதிய கள்ளிக்காட்டில் பிறந்த தாயே பாடலுக்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
To Top