Categories: சினிமா

வார்த்தைய மாற்ற சொன்ன இளையராஜாவிடம் கோபப்பட்ட வைரமுத்து… ஆனா ரஹ்மான் சொன்னப்ப மட்டும் சம்மதம்… ஏன் தெரியுமா?

Spread the love

தமிழ் சினிமாவில் மீண்டும் இவர்கள் இணைய மாட்டார்களா என்று ரசிகர்களும் திரையுலகினரும் ஏங்கும் ஒரு காம்பினேஷன் இளையராஜா வைரமுத்து காம்போதான்.ஆனால் அதற்கான வாய்ப்பு ஒரு சதவீதம் கூட இல்லை என்பதுதான் மறுக்க முடியாத உண்மை. அவர்கள் இணைந்து பணியாற்றியது வெறும் ஆறே ஆண்டுகள்தான் என்ற போதும் அவர்கள் உருவாக்கிய பாடல்கள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.

1980 ஆம் ஆண்டு இருவரும் நிழல்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற இது ஒரு பொன்மாலைப் பொழுது என்ற பாடலின் மூலம் இணைந்தார்கள். அதன் பிறகு இருவருக்கும் இடையிலான நட்பு அதிகமாகி அடுத்தடுத்த ஆண்டுகளில் இளையராஜா இசையில் அதிக பாடல்கள் எழுதியவராக இருந்தார். ஆனால் இந்த கூட்டணி ஒரு கட்டத்தில் பிரிந்தது.

அதற்குக் காரணம் வைரமுத்துவின் பாடல்களில் வார்த்தைகளை இளையராஜா மாற்ற சொன்னதுதான் என்று சொல்லப்படுகிறது. ஒரு பாடலில் மெட்டுக்குப் பொருந்தாத வரிகளை வைரமுத்து வருவதற்கு முன்பாக இளையராஜாவே மாற்றியதால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்ததாக சொல்லப்படுகிறது.

#image_title

இப்படி தன் வரிகளுக்காக இளையராஜாவிடம் சண்டை போட்டு பிரிந்த வைரமுத்து சில ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரஹ்மான் வந்த பிறகுதான் மீண்டும் புகழ் வெளிச்சத்துக்கு வந்தார். அவர் ரஹ்மானுடன் ஆரம்ப காலங்களில் பணியாற்றிய ரோஜா மற்றும் கிழக்குச் சீமையிலே ஆகிய படங்களின் பாடல்கள் பெரும் வெற்றி பெற்றன.

அப்படிப்பட்ட ஒரு பாடல்தான் ‘கத்தாழங் காட்டுவழி பாடல். அந்த பாடலுக்கு முதலில் வைரமுத்து எழுதிய வரிகள் அவையில்லையாம் “வலது கண்ண விட்டு பிரிஞ்சு போற இடது கண்ணே… என ஆரம்பித்து நீ குருண போட்டு வளத்த கோழி கூட அழுகுதும்மா’ என எழுதியுள்ளார். இந்த வரிகளோடு பாடல் ரெக்கார்ட் செய்யப்பட்டுள்ளது. ஆனால் பாடல் காட்சிகள் படமாக்கப்பட்ட பின்னர் அவற்றுக்கு  வரிகள் பொருந்தவில்லை எனக் கூறியுள்ளார் ரஹ்மான்.

அந்த கருத்தை ஒத்துக் கொண்ட வைரமுத்து அதன் பின்னர் எழுதிய வரிகள்தான் “கத்தாழங் காட்டு வழி… கள்ளிப்பட்டி ரோட்டு வழி” என்ற வரிகள். இந்த தகவலை அப்போது வைரமுத்துவிடம் உதவியாளராக இருந்த நடிகர் மாரிமுத்து ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

 

 

vinoth

Recent Posts

தமிழ்நாட்டின் முதல் ஓட்டு..! காலை 6.45 மணிக்கே முதல் ஆளாக வந்து வாக்களித்த அஜித் குமார்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்குத் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு முன்னதாகவே…

7 minutes ago

குடும்பத்தோடு வந்து ஓட்டு போட்ட நடிகர் கென் கருணாஸ்.. வைரலாகும் புகைப்படம்..!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-ன் ஒரு பகுதியாக, வளர்ந்து வரும் இளம் நடிகரும் பாடகருமான கென் கருணாஸ் தனது குடும்பத்துடன்…

17 minutes ago

காலையிலேயே ஜனநாயகக் கடமையை ஆற்றினார் சூப்பர்ஸ்டார்.. மகள் சௌந்தர்யாவுடன் வந்து வாக்களிப்பு..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் 2026-க்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தனது ஜனநாயகக் கடமையை…

19 minutes ago

“ஒவ்வொரு ஓட்டும் முக்கியம்” ஜனநாயகக் கடமையை முடித்துவிட்டு விஜய் சொன்ன அந்த ‘பவர்ஃபுல்’ மெசேஜ்..!!

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய், சென்னை நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.…

24 minutes ago

“போட்ட பணம் டபுளா திரும்பி வரும்…” கோடிகளில் கூட சேமிக்கலாம்… நடுத்தர மக்களுக்கான அசத்தலான திட்டம்…!!

தபால் நிலையத்தின் 'கிசான் விகாஸ் பத்ரா' (KVP) திட்டம், முதலீட்டாளர்களின் பணத்தை பாதுகாப்பாக இரட்டிப்பாக்க உதவும் ஒரு சிறந்த சேமிப்புத்…

42 minutes ago

மின்னஞ்சல் அனுப்பினாலே போதும்…! கைநிறைய சம்பளத்துடன் ஜிப்மர் மருத்துவமனையில் வேலை… விண்ணபிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையின் காது, மூக்கு, தொண்டை (ENT) பிரிவில் காலியாக உள்ள 'திட்ட தொழில்நுட்ப உதவியாளர்' பணியிடத்திற்குத்…

1 மணத்தியாலம் ago