வைகுண்ட ஏகாதசி என்று சொர்க்கவாசல் திறப்பதை காண்பதும் சொர்க்கவாசல் வழியாகச் சென்று பெருமாலை தரிசிப்பதும் என்பது மிகவும் சிறப்பான ஒன்றாக பார்க்கப்படுகிறது. பூலோக வைகுண்டமான திருச்சி ஸ்ரீரங்கத்தில் இரா பத்து, பகல் பத்து என்று மொத்தம் 20 நாட்கள் வைகுண்ட ஏகாதேசி விழா நடத்தப்படும். இந்த 20 நாட்களும் 4000 திவ்ய பிரபந்தங்களும் இசைக்கப்படுகின்றன. விரதங்களில் மிகவும் புண்ணியமான விரதமாகவும் பெருமாளுக்கு மிகவும் விருப்பமான விரதமாகவும் ஏகாதேசி விரதம் கருதப்படுகின்றது. இந்த விரதம் இருந்தால் எப்படிப்பட்ட பஞ்சவ பாவமும் நீங்கி அவர்களுக்கான நன்மைகள் அதிகம் கிடைப்பதுடன் இறுதியில் மோட்சமும் கிடைக்கும்.
மாதத்திற்கு இரண்டு ஏகாதேசிகள் என வருடத்திற்கு மொத்தம் 24 ஏகாதேசி விரத நாட்கள் வரும். இவை ஒவ்வொன்றுக்கும் பெயர்கள், சிறப்புகள் மற்றும் தனியான பலங்கள் உண்டு. சில குறிப்பிட்ட மாதங்களில் வரக்கூடிய ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. அப்படி மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசி யை வைகுண்ட ஏகாதசி என்று அனைவரும் கொண்டாடுகிறோம். இந்த நாளில் அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கும் நிகழ்வு நடைபெறும்.
வைகுண்ட துவாரம் எனப்படும் இந்த வாசல் வழியாக சென்று பெருமாலை தரிசிப்பதற்கு வைண்ட பதவி கிடைக்கும் என்று ஐதீகம். அதனால் பக்தர்கள் அனைவரும் இந்த ஒரு நாள் வைகுண்ட துவாரம் வழியாக சென்று பெருமாளை தரிசனம் செய்வதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். ஏராளமானவர்கள் இரவு முழுவதும் கண்விழித்து உபவாசம் இருந்து விரதம் கடைபிடிக்கின்றன. பெருமாளின் காதுகளில் இருந்து தோன்றியது மது, கைடபர் என்ற அசுரர்கள் தேவர்களை துன்புறுத்தி வந்தனர்.
திருமால் அவர்களுடன் போரிட்டு வென்ற போது அசுரர்கள் இருவரும் அவரிடம் சரணடைந்தார்கள். தங்களுக்கு வைகுண்டத்தில் இடமளித்த பெருமாளிடம் வைகுண்ட ஏகாதசி என்று சொர்க்கவாசல் வழியாக உங்களை தரிசிப்பவர்களுக்கும் பின்தொடர்பவர்களுக்கும் பாவங்கள் நீங்க மோட்சம் கிடைக்க வேண்டுமென்று அவர்கள் வரம் கேட்டனர். அசுரர்களின் இந்த வேண்டுதலை ஏற்ற பெருமாள் அன்று ஒரு நாள் மட்டும் சொர்க்க வாசலை திறந்து தன்னை தரிசிப்பதற்கு தன் உலகமான வைகுண்டத்தில் இடம்பெளிக்க அருள்பாலித்தார். அதனால்தான் ஒவ்வொரு வருடமும் மார்கழி ஏகதசி என்று அனைத்து பெருமாள் கோவில்களிலும் சொர்க்கவாசல் திறக்கப்படுகின்றது.
ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…
கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…
குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…
ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…
திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…
பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி அருகே உள்ள பாசாபுரா பகுதியில், அதிவேகமாக வந்த டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று மோட்டார் சைக்கிள்…