பதவியும் வேணும்.. திமுகவும் வேணும்… வைகோவை அலறவிட்ட செந்தில் செல்வன்…பின்னணியில் நடந்த பரபரப்பு டீலிங்…!

By SATHISH R on ஆனி 26, 2026

Spread the love

மதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை நடைபெற உள்ள அதே வேளையில், சீர்காழி மதிமுக சட்டமன்ற உறுப்பினர் செந்தில் செல்வன் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணையப் போவதாக வெளியாகியுள்ள தகவல் அரசியல் வட்டாரத்திலும், குறிப்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடமும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சட்டப்பேரவை தேர்தலில் திமுகவின் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர், தற்போதைய கட்சித் தலைமையின் முடிவை எதிர்த்து தனது பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளது மதிமுக வட்டாரத்தில் கடுமையான சலசலப்பை உருவாக்கியுள்ளது.