தமிழக அரசியல் களம் தற்போது பெரும் பரபரப்பை சந்தித்து வருகிறது. அண்மையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் விஜயை நேரில் சந்தித்து பேசியுள்ளார். அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நேற்று வைகோவை சந்தித்ததைத் தொடர்ந்து, இன்று இந்த முக்கிய சந்திப்பு நிகழ்ந்துள்ளது. தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் புதிய உற்பத்தி பிரிவு தொடங்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், அதற்கு எக்காரணம் கொண்டும் மீண்டும் அனுமதி அளிக்கக்கூடாது என்ற கோரிக்கையை முதலமைச்சரிடம் வைகோ முன்வைத்ததாகக் கூறப்படுகிறது. மக்கள் நலன் சார்ந்த இந்த முக்கிய விவாதத்திற்கு மத்தியில், மதிமுகவின் அரசியல் எதிர்காலம் குறித்த விவாதங்களும் மறுபுறம் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன.
வருகிற 24-ஆம் தேதி மதிமுகவின் பொதுக்குழு கூட்டம் கூட உள்ள நிலையில், திமுக கூட்டணியில் நீடிப்பதா வேண்டாமா என்பது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. ஏற்கனவே நடந்த செயற்குழு கூட்டத்தில் கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் எனப் பலரும் வலியுறுத்தியபோது வைகோ அவர்களை சமாதானப்படுத்தினார். எனினும், தற்போதைய சூழலில் கட்சியின் முடிவை நோக்கி நகர்ந்தாலும், தனது எம்எல்ஏக்களை ராஜினாமா செய்ய வைக்கும் பட்சத்தில் அவர்கள் மீண்டும் வெற்றி பெறுவார்களா என்ற பெரிய கேள்விக் குறியும் எழுந்துள்ளது. மேலும், கூட்டணியை விட்டு விலகினால் கட்சியில் பிளவு ஏற்படுமா என்ற அச்சம் ஒருபுறம் இருந்தாலும், வைகோ எடுக்கப்போகும் இறுதி முடிவு தமிழக அரசியலில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
