திடீர் திருப்பமாக, நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு ம.தி.மு.க ஆதரவளிக்கும் என்று அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அதிரடியாக அறிவித்துள்ளார். அண்மையில் நடைபெற்ற ம.தி.மு.க பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், உள்ளாட்சித் தேர்தலிலும் த.வெ.க-வுடன் தோழமை ஏற்படும் வகையில் தங்களது நடவடிக்கைகள் அமையும் என்றும், “ராஜினாமா செய்தால் அந்த இரண்டு உறுப்பினர்களையும் ஜெயிக்க வைக்க வேண்டியது என் பொறுப்பு” என த.வெ.க தலைவர் விஜய் தனக்கு நேரில் உத்தரவாதம் அளித்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சில தினங்களுக்கு முன்பு திருமண விழா ஒன்றில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினைச் சந்தித்தபோது அவர் தன்னிடம் பேசவில்லை என்றும், முதல்வர் மனதில் கோபம் இருந்தது தெளிவாகத் தெரிந்ததாகவும் வைகோ ஓப்பனாகப் பேசியிருப்பது, தற்போதைய தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பையும் புதிய விவாதங்களையும் கிளப்பியுள்ளது.
