ECI போட்ட போடு…. தவெக லிஸ்ட்டில் இருந்து தூக்கப்பட்ட வைகோ, திருமா… அதிர்ச்சியில் கூட்டணி தலைவர்கள்….!

By Nanthini on புரட்டாதி 22, 2026

Spread the love

மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 77-ன் படி, ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி தனது சொந்தக் கட்சியின் உறுப்பினர்களை மட்டுமே தனது நட்சத்திரப் பேச்சாளர்களாக (Star Campaigners) நியமிக்க முடியும். ஆனால், இடைத்தேர்தலை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்ட நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில், கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களின் பெயர்களும் இடம்பெற்றிருந்தன. வைகோ, காதர் மொகிதீன், தொல். திருமாவளவன், மாணிக்கம் தாகூர், ரவிக்குமார் மற்றும் சிந்தனைச் செல்வன் போன்ற பிற கட்சித் தலைவர்களின் பெயர்கள் இதில் சேர்க்கப்பட்டிருந்ததை எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்ததுடன், தேர்தல் விதிகளுக்குப் புறம்பானது என்றும் சுட்டிக்காட்டின.

எதிர்க்கட்சிகளின் சுட்டிக்காட்டல் மற்றும் கடுமையான விமர்சனங்களைத் தொடர்ந்து, இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) இதில் தலையிட்டுச் சட்ட விதிகளின்படி நடவடிக்கைகளை மேற்கொண்டது. அதனடிப்படையில், விதிகளை மீறிச் சேர்க்கப்பட்டிருந்த கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளின் பெயர்கள் தவெகவின் நட்சத்திரப் பேச்சாளர் பட்டியலில் இருந்து அதிகாரப்பூர்வமாக நீக்கப்பட்டன. இந்தத் திருத்தங்களுக்குப் பிறகு, தவெகவின் புதுப்பிக்கப்பட்ட புதிய நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலைத் தேர்தல் ஆணையம் தற்போது வெளியிட்டுள்ளது.