படிப்பா..? கிரிக்கெட்டா..? ஐபிஎல் கனவுக்காக 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை புறக்கணித்த வைபவ் சூர்யவன்ஷி.. பெற்றோர் சொன்ன காரணம்..!!

By Soundarya on மாசி 18, 2026

Spread the love

இந்தியாவின் வளர்ந்து வரும் இளம் கிரிக்கெட் நட்சத்திரமான வைபவ் சூர்யவன்ஷி, தனது கிரிக்கெட் பயிற்சிகள் மற்றும் போட்டிகள் காரணமாக சிபிஎஸ்இ (CBSE) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதவில்லை என பள்ளி முதல்வர் அறிவித்துள்ளார். பீகாரின் சமஸ்திபூர் மாவட்டத்தைச் சேர்ந்த 14 வயதான வைபவ் சூர்யவன்ஷிக்கு, தேர்வெழுத அனுமதிச் சீட்டு (Admit Card) வழங்கப்பட்ட போதிலும், நேற்று தொடங்கிய முதல் நாள் தேர்வில் அவர் கலந்துகொள்ளவில்லை. ஐபிஎல் 2026 (IPL 2026) தொடருக்காக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் சார்பில் நாக்பூரில் நடைபெற்று வரும் தீவிரமான பயிற்சி முகாமில் அவர் பங்கேற்றுள்ளார். கிரிக்கெட் போட்டிகள் மற்றும் பிசிசிஐ (BCCI) பயிற்சி முகாம்களால் தேர்வுக்குத் தயாராக அவருக்கு போதிய நேரம் கிடைக்கவில்லை என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

சமீபத்தில் நடந்த 19-வயதுக்குட்பட்டோருக்கான (U-19) உலகக் கோப்பையில் இந்திய அணி கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். குறிப்பாக, இங்கிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 175 ரன்கள் குவித்து உலக சாதனை படைத்தார்.  இந்த ஆண்டு தேர்வைத் தவறவிட்டாலும், அடுத்த ஆண்டு அவர் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதுவார் என்று அவரது தந்தை சஞ்சீவ் சூர்யவன்ஷி மற்றும் பள்ளி முதல்வர் தெரிவித்துள்ளனர்.