CINEMA
வெங்கட்பிரபுவை விமர்சித்த விஜய்… கோட் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடந்ததை பகிர்ந்த வைபவ்…
வைபவ் தமிழ் சினிமாவில் பணியாற்றும் நடிகர் ஆவார். இவர் தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்துள்ளார். வைபவ் சென்னையில் பிறந்தவர். இவரது இயற்பெயர் சுமந்த் ரெட்டி என்பதாகும். இவரது தந்தை ஏ கோதண்டராமி ரெட்டி பிரபல தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆரம்பத்தில் அவரது தந்தை ஏ கோதண்டராமி இயக்கிய தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் நுழைந்தார் வைபவ். 2008 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கிய சரோஜா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் வைபவ். பின்னர் கோவா, மங்காத்தா, சென்னை 600028 இரண்டாம் பாகம் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் வைபவ்.
2019 ஆம் ஆண்டு மேயாத மான் திரைப்படத்தில் நாயகனாக நடித்தார். இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருப்பார். இந்த திரைப்படத்தில் தனது அபாரமான நடிப்பினை வெளிப்படுத்திய வைபவ் அனைவரின் பாராட்டுகளையும் பெற்றதோடு இந்த திரைப்படம் அவருக்கு சினிமாவில் திருப்புமுனையாக அமைந்தது. பின்னர் டானா, லாக்கப், டெலிகாஸ்ட், மலேசியா டு அம்நீஸியா, மன்மத லீலை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார் வைபவ்.
இது தவிர சில வெப் சீரிஸ்களிலும் நடித்துள்ளார் வைபவ். நேரடி ஒளிபரப்பு, ஆக்சிடென்டல் ஃபார்மர் அண்ட் கோ, நவீன காதல் போன்ற வெப் சீரிஸ்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் வைபவ். தற்போது விஜய் நடிப்பில் வெளியாக இருக்கும் கோட் திரைப்படத்திலும் நடித்துள்ளார் வைபவ்.
கோட் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட வைபவ் சூட்டிங் ஸ்பாட்டில் விஜய் அவரிடம் பேசுவதை பற்றி பகிர்ந்து கொண்டுள்ளார். அவர் கூறியது என்னவென்றால், வெங்கட் பிரபு ஷூட்டிங் ஸ்பாட்ல வேலை செஞ்சுட்டு இருப்பார். அப்போ விஜய் சார் என்ன கூப்பிட்டு வெங்கட் பிரபுவை பார்த்து, ஏன்டா இவ்ளோ பெரிய படம் எடுக்கிறான், ரொம்ப பிரம்மாண்டமா எடுக்கிறான், ஆனால் எப்படி ஒன்றுமே தெரியாத பச்ச புள்ள மாதிரி ஓரமா உக்காந்து இருக்கான். என்ன நடந்தாலும் கூலாவே இருக்கானே இந்த பிரபு எப்படிடா அப்படின்னு வெங்கட் பிரபு பத்தி என்கிட்ட விஜய் கேட்டார் என்று பகிர்ந்துள்ளார் வைபவ்.