நடிகர் அஜீத்குமார் உச்சத்தில் இன்று டாப் ஸ்டாராக இருக்கிறார். ரஜினி, கமல், விஜய் வரிசையில் அஜீத் முக்கிய ஹீரோவாக இருக்கிறார். ஆனால் அஜீத் படங்களில் கடந்த 22 ஆண்டுகளாக வடிவேலு நடிக்கவில்லை. ரஜினி, விஜய், சத்யராஜ், சரத்குமார், விஷால் போன்றவர்களுடன் வடிவேலு நடிக்கிற போது, அஜீத்குமாருடன் நடிக்காததற்கு காரணம், அவரது படங்களில் நடிக்க வடிவேலுவை அவர் அனுமதிப்பது இல்லை.
இதுகுறித்து நடிகர், பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் கூறியதாவது, அஜீத் படங்களில் வடிவேலு நடிக்காதது ஏன் என்று பிரபல இயக்குநர் எழில் சொன்ன தகவல் இது. அஜீத் கடைசியாக வடிவேலுவுடன் நடித்த படம் ராஜா. இந்த படத்தில் நடிக்கும் போது கதைக்கு ஏற்றபடி மருமகன்கிட்ட தாய்மாமா எப்படி பேசணுமோ, அப்படி போடா வாடான்னு வடிவேலு அஜீத் கிட்ட பேசியிருக்கிறார். ஆனால் ஷூட்டிங் முடிந்த பிறகும் அதே ஸ்டைலில் என்னடா அஜீத், சொல்டா அஜீத், வாடா போடா என்று வடிவேலு மரியாதையின்றி பேசியிருக்கிறார். இதனால் அஜீத் முகம் சுளித்துவிட்டார்.
வடிவேலு பேசுவது குறித்து என்னடா இது என்று சங்கடப்பட்டு இருக்கிறார். அவர் கவுரவமான ஆள். அதனால் படத்தின் இயக்குநர் எழிலை கூப்பிட்டு, வடிவேலு என்னை வாடா போடான்னு பேசறது எனக்கு பிடிக்கலே. கொஞ்சம் மாத்தி அவர்கிட்ட பேச சொல்லுங்க என்று சொல்லி இருக்கிறார். இதுகுறித்து வடிவேலுவிடமும், இயக்குநர் எழில் கூறியிருக்கிறார்.
அந்த படம் முடிகிற வரைக்கும் அஜீத் அமைதியாக இருந்தார். அதன்பிறகு கதை சொல்ல வருகிற இயக்குநர்களிடமும், கால்ஷீட் கேட்டு வருகிற தயாரிப்பாளர்களிடமும் வடிவேலுவா, எதுக்கு, என தன்னுடைய படங்களில் வடிவேலு நடிக்க அனுமதி மறுத்தார் அஜீத்குமார். இதுதான் வடிவேலு, அஜீத் படத்தில் நடிக்காததற்கு காரணம் என்று பயில்வான் ரங்கநாதன் கூறியிருக்கிறார்.