சுந்தர்.சி – வடிவேலு பிரிய காரணமே சந்தானம் தானா?.. இவங்களுக்குள்ள இப்படி ஒரு பிரச்சனை இருக்கா..?

By Nanthini on மார்கழி 9, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவர்தான் வடிவேலு. சினிமாவில் ராஜ்கிரனால் அறிமுகப்படுத்தப்பட்ட இவர் கவுண்டமணி மற்றும் செந்தில் உச்சத்தில் இருந்த போது அவர்களுடன் சேர்ந்து சிறிய சிறிய கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அந்த சமயத்தில் விவேக்கும் வளர்ந்து வந்த நிலையில் வடிவேலுக்கு கடுமையான போட்டி இருந்தது. இருந்தாலும் தனக்கு கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் சரியாக பயன்படுத்திக் கொண்டு உழைத்தேன் முன்னேறினார். தன்னுடைய காமெடிகளில் தன்னை தானே தாழ்த்திக் கொண்டு மக்கள் அனைவரையும் சிரிக்க வைத்தார். எந்த ஒரு ஈகோவும் இல்லாமல் விவேக் கூட நினைந்து பல திரைப்படங்களில் நடித்தார். ஒரு கட்டத்தில் வயது மூப்பு காரணமாகவும் காலம் மாறியதாலும் கவுண்டமணியும் செந்திலும் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்க அந்த இடத்தை சரியாக வடிவேலோ பயன்படுத்திக் கொண்டார்.

நாய் சேகர் படத்தின் தோல்வி.. வடிவேலு எடுத்த அதிரடி முடிவு

   

இதனால் வைகைப்புயல் வடிவேலு என்று சொல்லும் அளவுக்கு காமெடியால் ஒட்டுமொத்த ரசிகர்களையும் கட்டி போட்டார். இப்படியான சூழலில் வடிவேலுக்கு ஏற்பட்ட சில நெருக்கடிகளாலும் பஞ்சாயத்துகளாலும் சினிமாவிலிருந்து ஒதுங்கினார். அதன் பிறகு நாய் சேகர் ரிட்டன்ஸ் திரைப்படம் மூலமாக ரீ என்ட்ரி கொடுத்தார். அதன் பிறகு மாமன்னன் மற்றும் சந்திரமுகி 2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்த வடிவேலு மாரீசன் என்ற திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படியான நிலையில் நடிகர் வடிவேலு பற்றி பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சமீபத்தில் அளித்த பேட்டியில் பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், வடிவேலுவை காமெடியில் அடித்துக் கொள்ள ஆளே கிடையாது.

   

சுந்தர்.சி படத்தில் நடிக்கும் வடிவேலு? | Chennaionline

 

ஆனால் அவர் சினிமாவில் நடிக்கும் போது ஒரு படத்தில் தான் மட்டும் தனியாக தெரிய வேண்டும் என்று நினைப்பார். தனக்கு படத்தில் எந்த ஜோடியும் இல்லாமல் தனியாக தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும் என்று நினைப்பார். இப்படி இருக்கையில் வடிவேலு மற்றும் சுந்தர் சி கூட்டணி சினிமாவில் கிளாசிக் ஆனா கூட்டணியாக இருந்தது. சுந்தர் சி இயக்கத்தில் வடிவேலு நடித்த வின்னர், கிரி ஆகிய திரைப்படங்களிலும் சுந்தர்சியுடன் தலைநகரம் மற்றும் நகரமாகிய திரைப்படங்களிலும் சேர்ந்து பணியாற்றினார். ஆனால் இந்த படங்களை தவிர்த்து இவர்கள் இணைந்து கடந்த சில வருடங்களாக பணியாற்றவில்லை.

சந்தானம் செஞ்ச காரியத்தை கூட வடிவேலு செய்யலை- பிரபல காமெடி நடிகர் கண்ணீர் பேட்டி…

இவர்கள் இருவருக்குமே ஒரு பிரச்சனை உள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் வெளியான ரெண்டு திரைப்படத்தில் வடிவேலு மற்றும் சந்தானம் உள்ளிட்டோர் நடித்திருந்தனர். அந்தப் படத்தில் சந்தானம் நடித்தது வடிவேலுவுக்கு முன்னரே சொல்லப்படவில்லை. அது மட்டுமல்லாமல் சந்தனம் தொடர்பான காட்சிகள் தனியாக எடுக்கப்பட்ட எடிட்டிங்கில் படத்துடன் சேர்க்கப்பட்டுள்ளது. படம் ரிலீசுக்கு பிறகு இதை பார்த்த வடிவேலு உச்சகட்ட கோபமடைந்து படத்தின் பாதியிலேயே தியேட்டரில் இருந்து கிளம்பி விட்டாராம். அப்போதிலிருந்து சுந்தர்சியுடன் முரண்பாடு ஏற்பட எந்த படத்திலும் ஒன்றாக பணியாற்றவில்லை. இவர்கள் இருவருக்கும் இடையேயான பிரச்சனைக்கு அந்த படத்தில் சந்தானம் நடித்தது தான் முக்கிய காரணம் என பாலாஜி பிரபு பேசியுள்ளார்.