துணை நடிகர்களுக்கு 5000 வேண்டாம் 1500 ரூபாய் குடுங்க போதும்.. இப்படி ஒரு கல்நெஞ்சக்காரரா வடிவேலு..? பகீர் கிளப்பிய பிரபலம்..

By Sumathi

Published on:

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக ஒரு காலகட்டத்தில் கோலோச்சியவர் நடிகர் வடிவேலு. அவர் ரஜினி, விஜய், சூர்யா என ஹீரோக்களுடன் சேர்ந்து நடிக்கும்போது அவர்களுடன் காமெடி செய்வார். அல்லது தனது காமெடி நடிகர்களுடன் கூட்டணி அமைத்துக்கொண்டு தனியாகவும் காமெடி செய்வார். அந்த வகையில் பல படங்களில் கூட்டணி நடிகர்களுடன் அவர் செய்த காமெடி வேற லெவலில் இருக்கும். இன்றும் அந்த காமெடி பார்த்து, பார்த்து ரசிக்கும்படியாக அதிக வரவேற்பை பெற்றிருக்கும். உதாரணமாக கருப்பசாமி குத்தகைதாரர், சில்லுனு ஒரு காதல், ஆறு, 12பி, கண்ணும் கண்ணும், காத்தவராயன், இந்திரலோகத்தில் நா அழகப்பன், திமிரு, எலி, தலைநகரம் என பல படங்களில் காமெடி நடிகர்களான துணை நடிகர்களுடன் நடித்திருப்பார். இதில் அல்வா வாசு, வெங்கல் ராவ், பாவா லட்சுமணன், போண்டாமணி, தம்பி ராமையா, சாரை பாம்பு சுப்புராஜ், முத்துக்காளை, சிங்கமுத்து, நெல்லை சிவா, பெஞ்சமின், மீசை ராஜேந்திரன், தாடி பாலாஜி என பலரை சொல்ல முடியும்.

   

இதில் சிலர் பிரபல நடிகர்கள் என்பதால் வடிவேலுவுடன் வாய்ப்பு கிடைத்தால் நடிப்பார்கள்.இல்லை என்றால் அவர்களுக்கான வாய்ப்பை தேடிக்கொள்வார்கள். ஆனால் போண்டாமணி, வெங்கல் ராவ், சாரை பாம்பு சுப்புராஜ், பெஞ்சமின், அல்வா வாசு போன்றவர்குளுக்கு தனி காமெடி நடிகராக வாய்ப்புகள் இல்லாததால் வடிவேலுவை நம்பி அவரது காமெடி காட்சிகளில் நடித்துள்ளனர். வடிவேலுவுடன் நடிக்கும் துணை நடிகர்களின் சிறப்பான நடிப்புதான், அவரது காமெடி இன்னும் பேசப்படும் அளவுக்கு மக்களின் வரவேற்பை பெற்றதாக இருக்கிறது. அதே வேளையில் தன்னுடன் நடிக்கும் துணை நடிகர்கள் பெரிய அளவில் வந்துவிடக்கூடாது என்பதில் மிக கவனமாக இருந்திருக்கிறார் வடிவேலு.

இதுகுறித்து சினிமா விமர்சகர் செய்யாறு பாலு ஒரு நேர்காணலில் கூறியதாவது, பல ஆண்டுகளுக்கு முன் நடந்த உண்மை சம்பவம் இது. ஒரு படத்தின் ஷூட்டிங்கில் நடிகர் வடிவேலு, போண்டாமணி உள்ளிட்ட காமெடி நடிகர்கள் பங்கேற்று நடித்துள்ளனர். அப்போது வடிவேலுவின் ஒரு நாள் சம்பளம் ரூ. 10 லட்சமாக இருந்துள்ளது. மற்ற துணை நடிகர்கள் சம்பளம் 5 ஆயிரம் ரூபாயாக இருந்துள்ளது. அந்த படத்தின் புது தயாரிப்பாளர், வடிவேலுவுடன் நடித்த காமெடி நடிகர்களுக்கு தலா 20 ஆயிரம் சம்பளம் தர முன்வந்துள்ளார்.

ஏனெனில் வடிவேலுவுக்கு ஒருநாளைக்கு ரூ. 10 லட்சம் தரும்போது அந்த காமெடியில் நடிக்கும் துணை நடிகர்களுக்கு ரூ. 20 ஆயிரம் தாராளமாக தரலாம் என அந்த தயாரிப்பாளர் முன்வந்திருக்கிறார். இதுகுறித்து தகவலறிந்த நடிகர் வடிவேலு, அந்த தயாரிப்பாளரை அழைத்து, இப்போ நீ எதுக்கு 20 ஆயிரம் ரூபாய் தர்றே? நாளைக்கு வர்ற தயாரிப்பாளர் கிட்டேயும் அவன் 20 ஆயிரம் ரூபா சம்பளம் கேட்பான், அதனால ஆளுக்கு 1500 ரூபாய் மட்டும் ஒரு நாள் சம்பளமாக கொடு என்று கொடுக்க வைத்திருக்கிறார். இதை போண்டாமணியே என்னிடம் ஒருமுறை வருத்தப்பட்டு சொன்னார் என்று அந்த நேர்காணலில் கூறியிருக்கிறார் சினிமா விமர்சகர்  செய்யாறு பாலு.

author avatar
Sumathi