கவுண்டமணியின் மகனாக வடிவேலு நடிக்க இருந்த படம்… தட்டிவிட்ட நடிகரால் கடைசியில் நடந்த ட்விஸ்ட்..

By vinoth on மார்ச் 23, 2024

Spread the love

தமிழ் சினிமாவில் என் ராசாவின் மனதிலே படத்தில் சிலக் காட்சிகளில் மட்டும் தோன்றி ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற போடா போடா புண்ணாக்கு என்ற பாடலின் சில வரிகளையும் பாடினார். இதையடுத்து சிங்காரவேலன் படத்தில் கமல்ஹாசனோடு நடிக்கும் போது அவரின் உடல்மொழி பிடித்துப் போய் கமல்ஹாசன் தேவர் மகன் படத்தில் வாய்ப்பளித்தார்.

தேவர் மகன் படம் வடிவேலுவுக்கு ஒரு நல்ல பிரேக்காக அமைந்தாலும், வி சேகரின் இயக்கத்தில் அவர் அடுத்தடுத்து நடித்த ‘வரவு எட்டணா செலவு பத்தனா’, காலம் மாறி போச்சு, நான் பெற்ற மக்னே போன்ற படங்கள்தான் அவரை காமெடியில் உச்சம் தொட வைத்தன. ஆனால் வீ சேகர் அவரை தன்னுடைய படங்களில் நடிக்க வைத்த போது கவுண்டமணி, செந்தில் போன்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

   

ஆனாலும் வீ சேகர் வடிவேலுவுக்குள் இருந்த திறமையை உணர்ந்து தொடர்ந்து அவருக்கு தன்படங்களில் நடிக்க வைத்தார். தன்னுடைய படங்களில் வடிவேலுவுக்கு கோவை சரளாவை ஜோடியாக நடிக்க வைத்தார். இப்படி வடிவேலுவின் வளர்ச்சி அபரிமிதமாக சென்று கொண்டிருந்த நிலையில் வீ சேகர் கவுண்டமணி மற்றும் வடிவேலு ஆகிய இருவரையும் முக்கிய வேடத்தில் நடிக்க வைத்து ஒரு கதையை எழுதியுள்ளார்.

   

அந்த கதையில் கவுண்டமணி அப்பாவாகவும், வடிவேலு மகனாகவும் நடிக்க வேண்டும் என முடிவு செய்து கவுண்டமணியிடமும் சம்மதம் வாங்கியுள்ளார். ஆனால் இப்படி ஒரு படம் வந்துவிட்டால் கவுண்டமணி செந்தில் என்ற ஜோடி போய் கவுண்டமணி- வடிவேலு என்ற ஜோடி உருவாகிவிடும் என செந்தில் பயந்துள்ளார். அதனால் கவுண்டமணியிடம் போய் ஏதேதோ சொல்லி அந்த படத்தில் நடிப்பதில் இருந்து கவுண்டமணியை விலக வைத்துவிட்டாராம். இதை வீ சேகர் தனது ஒரு நேர்காணலில் கூறியுள்ளார்.

 

அதன் பிறகு அந்த கதையில் சில மாற்றங்களை செய்துதான் காலம் மாறிப் போச்சு படத்தை உருவாக்கினாராம். கவுண்டமணி நடிக்க இருந்த கதாபாத்திரத்தில் வினு சக்ரவர்த்தி நடித்தார் எனக் கூறியுள்ளார்.