அதிமுகவில் இருந்து விலகிய எஞ்சினியர் வடவள்ளி சந்திரசேகர் மீண்டும் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி முன்னிலையில் தன்னை அதிமுகவில் மீண்டும் இணைத்து கொண்டார். கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்த சந்திரசேகர் எம்ஜிஆர் இளைஞர் அணி மாநில இணை செயலாளர் ஆக இருந்தார். அதிமுக ஆட்சிக்காலத்தில் முன்னாள் அமைச்சர் வேலு மணியின் நெருங்கிய நண்பராக கட்சியினரால் அறியப்பட்டார். கடந்த 2021 சட்டசபை தேர்தலில் கோவை வடக்கு தொகுதியில் போட்டியிட விரும்பினார். தெற்கு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்க வேண்டிய நெருக்கடி ஏற்பட்டதால் மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜுனனுக்கு வடக்கு தொகுதி வழங்கப்பட்டது.
இதனால் உள்ளாட்சி தேர்தலில் அவருடைய மனைவி ஷர்மிளா சந்திரசேகரை போட்டியிட வைத்து மேயராக விரும்பிய நிலையில் கோவை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் மூன்று வார்டுகளில் மட்டும் அதிமுக வென்றது. 2022 ஆம் ஆண்டில் முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி வீடு மற்றும் அவருடைய நண்பர்கள் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை செய்தபோது சந்திரசேகரும் சிக்கி இருந்தார்.
இந்த சம்பவத்திற்கு பிறகு அதிமுக நிகழ்ச்சிகள் மற்றும் கூட்டங்களில் பங்கேற்காமல் ஒதுங்கி இருந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் தனிப்பட்ட காரணங்களுக்காக கட்சியில் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். இந்நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணியை நேரில் சந்தித்து சந்திரசேகர் மீண்டும் அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இவருடைய இந்த இணைப்பு தற்போது அரசியலில் கவனம் பெற்றுள்ளது.
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி வரும் நிலையில், அரசியல் களம் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிரடி திருப்பங்களைக்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் 2026-ன் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், தற்போதைய நிலவரப்படி தமிழக அரசியலில் ஒரு…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், தான் போட்டியிட்ட பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும் மகத்தான…
தமிழக அரசியல் வரலாற்றில் முப்பத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் ஒரு நேரடித் தேர்தலில் தோல்வியைத் தழுவியிருப்பது…
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஒரு மிகப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ள நிலையில், அக்கட்சியின் தலைவர் விஜய்…