தமிழகத்தில் 2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஏறத்தாழ பெரும்பாலான கட்சிகள் கூட்டணி முடிவுகளை அறிவித்து விட்டன. ஆனால் பாமக மற்றும் தேமுதிக விடுத்த கட்சிகள் இதுவரை கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிடாமல் உள்ளன. இதனிடையே பிரேமலதா வருகின்ற ஜனவரி மாதம் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் தேமுதிக கூட்டணி குறித்து அறிவிப்பை வெளியிட உள்ளதாக சமீபத்தில் தெரிவித்திருந்தார். தேமுதிக யாருடன் கூட்டணி வைக்கும் என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.
இந்நிலையில் அனைத்து கட்சிகளும் எங்களுடன் தோழமையாக உள்ளன. ஆனால் கூட்டணி என கூற முடியாது என்று பிரேமலதா தெரிவித்துள்ளார். யாருடன் கூட்டணி, எத்தனை தொகுதிகள் மற்றும் வேட்பாளர்கள் யார் என்ற முழு விவரமும் ஜனவரி ஒன்பதாம் தேதி அறிவிக்கப்படும் என கூறியுள்ளார்.
இந்நிலையில் தேமுதிக கிட்டத்தட்ட கூட்டணியை உறுதி செய்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளிடமும் ஒரே நேரத்தில் தேமுதிக பேச்சுவார்த்தை நடத்துவதாக பேசப்பட்டது. இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தேமுதிக தலைவர் பிரேமலதா இன்று சந்தித்து பேசியுள்ளார். இது குறித்து பேசி உள்ள பிரேமலதா, இந்த சந்திப்பில் அரசியல் எதுவும் பேசவில்லை. குருபூஜைக்கான அழைப்பிதழை வழங்குவதற்காகவே இபிஎஸ்ஐ நேரில் சந்தித்தேன் என்று விளக்கம் அளித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வரும் 'தமிழா தமிழா' நிகழ்ச்சியில், இந்த வாரம் "கணவன் மனைவி இடையே Personal Space…
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளில் திமுக தோல்வி முகத்தில் இருக்கும் நிலையில், அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது முதல்வர் பதவியை…
திருமணமான நேஹா என்ற பெண், கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தனது கணவரைப் பிரிந்து அர்ஜுன் என்ற காதலனுடன் 'லிவ்-இன்' உறவில்…
2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் எவ்வித எதிர்பாராத திருப்பங்களையும் ஏற்படுத்தலாம் எனக் கணிக்கப்படும் நிலையில், ஆளும் திமுக மற்றும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் நிகழ்த்தியுள்ள சாதனைக்கு பின்னால் உள்ள ஜோதிட ரீதியான…
தமிழக அரசியலில் பல தசாப்தங்களாக நிலவி வந்த திமுக - அதிமுக என்ற இருதுருவ அரசியலை, நடிகர் விஜய்யின் 'தமிழக…