சினிமாவில் ஒரு சில கலைஞர்களை திருப்தி படுத்தவே முடியாது. அப்படியான ஒரு கலைஞர் உலகநாயகன் கமல்ஹாசன். திரைக்கதை, இயக்கம், தயாரிப்பு, எழுத்தாளர், பாடகர், நடிகர் என பன்முகத் தன்மை கொண்டனர். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ் சினிமாவில் ஒரு அடையாளமாய் திகழ்பவர் கமல்ஹாசன். இவரிடம் பணியாற்றுவதற்கு பலரும் பயப்படுவார்களாம். அவருக்கு ஒரு காட்சி இப்படி தான் வேண்டும் என்றால் அது எத்தனை பெரிய கலைஞர்களாக இருந்தாலும் அவர்களிடம் இருந்து அதனை பெற்றேத் தீருவாராம்.
அவரது படங்களில் ஒவ்வொரு முறையும் ஒரு புதிய யுக்தியை, தொழில்நுட்பங்களை புகுத்து மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்துவார். சில நடிகைகள் இவரும் நடிக்கவே மறுப்பு தெரிவித்த காலங்களும் உண்டு. ஒரு முறை அவருடன் நடித்தால், பலவற்றை அறிந்துகொள்ள முடியும். அதேசமயம் கடுமையாக உழைக்கவும் வேண்டும். அது எத்தனை பெரிய உட்சபட்ச கலைஞர்களாக இருந்தாலும் சரி. அப்படி அவரிடம் மாட்டியவர் தான் கவிஞர் வாலியும்.
மும்பை எக்ஸ்பிரஸ் படத்தின் ஷூட்டிங் மும்பையில் நடைபெற்றுக் கொண்டிருந்தப் போது வாலியிடம் இப்படத்திற்கு பாடல் எழுதிக் கொடுக்கும் படி கேட்டுள்ளார். ஆனால் அவர் எழுதிக் கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டாராம். ஏன் என அவரிடம் கேட்டதற்கு, அபூர்வ சகோதரர்கள் என்ற படத்தில் ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதி வாங்கினாராம் கமல். பொதுவாக ஒரு பாடலுக்கு இரண்டு பல்லவி, இரண்டு சரணம் எழுதுவது தான் கவிஞர்களின் வழக்கம். அதிலும் அனுபவசாலிகள் என்றால் ஒரே தடவையில் ஒட்டுமொத்த பாடலையும் எழுதி விடுவர்.
அப்படி இருக்க, அனுபவம், மற்றும் திறமைசாலியான வாலியிடம் ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதி வாங்கினாராம் கமல். இதனால் ஆத்திரமடைந்த வாலி, ஒரே ஒரு பாடலுக்காக 22 பாடல்களை எழுதியது எனது வரலாற்றிலேயே இது தான் முதல் முறை எனவும், இனிமேல் கமலுக்கு பாடல் எழுத மாட்டேன் எனவும் கூறியிருக்கிறார்.