Categories: சினிமா

நான் எழுதிய பாடல்களிலேயே அந்த வரிதான் எனக்கு எப்பவும்  பிடிக்கும்… வாலியின் நாஸ்டால்ஜிக் மொமண்ட்!

Spread the love

தமிழ் சினிமாவில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக தன்னுடைய பாடல் வரிகளால் கோலோச்சியவர் கவிஞர் வாலி. அவரின் ஆரம்ப காலத்தில் கண்ணதாசனோடும், 80 மற்றும் 90 களில்  வைரமுத்துவோடும். 2000களில் முத்துகுமார் உள்ளிட்ட இளம் கவிஞர்களோடும் போட்டி போட்டார். ஆனால் அவர் அனைவரிடமும் நட்பாகப் பழகினார். இதனால் அவரை ரசிகர்கள் வாலிபக் கவிஞர் என்றே அழைத்தனர்.

திரையுலகில் வாலிக்கு மிகவும் நெருக்கமான நண்பர்களில் ஒருவர் நடிகர் எம் ஜி ஆர். தன்னுடைய படங்களுக்கு முதலில் கண்ணதாசனையே தொடர்ந்து பாடல்கள் எழுத வைத்து வந்தார் எம் ஜி ஆர். ஆனால் இருவருக்கும் இடையே அரசியல் ரீதியாக ஒரு பிரிவு வந்தது. எம் ஜி ஆர் தீவிரமாக திமுகவில் இயங்கி வந்த நிலையில், கண்ணதாசன் திமுகவில் இருந்து காங்கிரஸுக்கு தாவினார்.

அதன் பின்னர் கண்ணதாசன் எம் ஜி ஆரைக் கடுமையாக விமர்சனம் செய்ய ஆரம்பித்தார். அப்போதுதான் எம் ஜி ஆர் வாலியை தன்னுடைய ஆஸ்தான கவியாக மாற்றிக் கொண்டார். அதன் பின்னர் பல நடிகர்களுக்கு எழுதிய வாலி, கடைசியாக சிவகார்த்திகேயன் வரைக்கும் பாடல்கள் எழுதியுள்ளார். வாலியைப் பொறுத்தவரை திரையுலகில் அனைவருமே அவருக்கு நண்பர்கள்தான். சக பாடல் ஆசிரியர்கள் முதற்கொண்டு அனைவருமே அவரிடம் அன்பாகப் பழகுவார்கள்.

வாலியைப் பொறுத்தவரை எப்போதுமே அவர் இரண்டாம் ரேங்க் எடுக்கும் மாணவர்தான். கண்ணதாசன், வைரமுத்து மற்றும் நா முத்துகுமார் உள்ளிட்டவர்கள் அந்தந்த சீசனில் முதல் ரேங்க் எடுப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லோர் காலத்திகும் வாலிதான் செகண்ட் ரேங்க். வாலி இறப்பதற்கு முன் 15 ஆயிரம் பாடல்களை எழுதியுள்ளார். அதில் பல பாடல்கள் கமர்ஷியல் பாடல்கள்.

ஆனால் அவர் எழுதியதிலேயே தனக்கு மிகவும் பிடித்த வரி என்று “தன்னுயிர் பிரிவதைப் பார்த்தவரில்லை/ என்னுயிர் பிரிவதை பார்த்து நின்றேன்” என்ற வரிகளைதான் சொல்கிறார். இதை ஒரு இடத்தில் பல இடத்தில் சொல்லியுள்ளார். அதனால் அவரது மனதுக்கு நெருக்கமான பாடல் இதுதானென்பது தெரியவருகிறது. இந்த பாடல் எம் ஜி ஆர் நடித்த பணம் படைத்தவன் படத்துக்காக எழுதப்பட்ட காதல் தோல்வி பாடல்.

vinoth

Recent Posts

அதிகாலையில் பயங்கரம்…!! ஆட்டோ டிரைவரை சுற்றி வளைத்த கும்பல்… ஒரே நாளில் இரட்டை கொலைகள்…. பின்னணி என்ன…? பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…

16 minutes ago

ஐயோ… என் வாழ்க்கையையே ஏமாத்திட்டியா?… ரயிலில் அம்பலமான மனைவியின்… ரகசிய முகத்தால் உடைந்த கணவன்…!

ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…

18 minutes ago

“காட்டுக்குள்ள அரசு வேலை நடக்குதா…?” வேறொருவர் மனைவியை அழைத்து சென்ற பஞ்சாயத்து தலைவர்…. பின் தொடர்ந்த கணவருக்கு காத்திருந்த அதிர்ச்சி…. பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…

24 minutes ago

ஐயோ… என்னால துக்கத்தைத் தாங்க முடியல… தற்கொலை பண்ணிக்க தோணுது… பெண் சப்-இன்ஸ்பெக்டரின் கண்ணீர் வீடியோ… மத்தியப் பிரதேசத்தில் அதிர்ச்சி சம்பவம்…!!

மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…

33 minutes ago

“என்னை விடுங்க…” புல் அறுக்க சென்ற பெண்… கை,கால்களை பிடித்து அடிக்கும் வாலிபர்கள்… கதறி துடித்த சோகம்… பதற வைக்கும் வீடியோ வைரல்…!!

சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…

57 minutes ago

ஐயோ கடவுளே… காது சியாம்ஜி தரிசனம் முடிந்து… திரும்பியபோது நேர்ந்த கோர விபத்து… காவலரின் சகோதரன் உட்பட 6 பேர் பரிதாப பலி… கதற வைக்கும் சோகம்…!!

குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…

1 மணத்தியாலம் ago