தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் எம்ஜிஆர். மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் எம்ஜிஆர். அரசியலும் சினிமாவிலும் தனக்கென தனி ராஜ்யத்தை உருவாக்கி சிம்மாசனம் போட்டு அமர்ந்திருந்தவர் எம்ஜிஆர்.

வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த எம்ஜிஆர் பிறகு சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி அபாரமாக தனது நடிப்பை வெளிப்படுத்தினார். எம்ஜிஆரின் படங்கள் என்றாலே சமூகநீதி கருத்துகள், திராவிட சிந்தனைகள், ஆக்சன் காட்சிகள் நிறைந்திருக்கும். அதனால் மக்கள் இவரை வெகுவாக ரசித்தனர்.
எம்ஜிஆர் படங்கள் வெளிவந்தாலே ஹிட் தான் என்ற அளவுக்கு புகழின் உச்சியில் இருந்தார். தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கி தேர்தலில் போட்டியிட்டு தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தினார் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல குணம் படைத்த மனிதர். வாரி வழங்கும் வள்ளல். தன்னை சேர்ந்தவர்களுக்கு பல உதவிகளை செய்பவர். அதேபோல் எம்ஜிஆர் மீது பலர் அதிக அன்பு கொண்டிருந்தனர். எம்ஜிஆரின் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர்களுள் ஒருவர் பாடலாசிரியர் வாலி. எம்ஜிஆரின் படங்களுக்கு பெரும்பாலான பாடல்களை எழுதியவர் வாலி. எம்.ஜி.ஆர் மனதில் என்ன நினைக்கிறாரோ அப்படியே பாடல்களில் எழுதிவிடுவார் வாலி. அப்படி ஒரு சம்பவத்தை இனி காண்போம்.

எம்ஜிஆர் நடித்த “அன்பே வா” திரைப்படத்தில் “புதிய வானம் புதிய பூமி” என்ற பாடல் வரும். அதில் “உதயசூரியன் பார்வையிலே” என்ற ஒரு வார்த்தையை சேர்த்து இருப்பார் வாலி. இதை பார்த்த ஏ வி எம் செட்டியார் உதயசூரியன் என்று நீங்கள் எழுதாதீர்கள் வாலி அதை மாற்றுங்கள் சென்சாரில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று கூறினார். உடனே உதயசூரியன் என்பதை புதிய சூரியன் என்று எழுதி இருந்தார் வாலி சென்சாரும் ஓகே ஆகிவிட்டது. ஏவிஎம் செட்டியார் அது என்ன புதிய சூரியன் என்று கேட்டார். இது புதிய சூரியன் அல்ல உதயசூரியன் தான் எம்ஜிஆர் வாயில் அவர் படிக்கும் போது உதயசூரியன் என்று தான் வரும் தியேட்டரில் மக்கள் ரசிப்பார்கள் என்று கூறினார். அதேபோல் இந்த பாடலில் இந்த வரி வரும்போது தியேட்டரில் விசில் பறந்தது. இதை அறிந்த எம்ஜிஆர் வாலியை அழைத்து நீ சாதாரணமான ஆள் கிடையாது வார்த்தைகளில் விளையாடுபவர் என்று கூறி பாராட்டி இருக்கிறார்.
