டெல்லியின் ராஜோரி கார்டன் பகுதியில் உள்ள ஆர்.ஜி மருத்துவமனைக்கு 26 வயது வாலிபர் ஒருவர், திருமணத்திற்குப் பின் குழந்தை இன்மை பிரச்சனை காரணமாகப் பரிசோதனைக்காக வந்துள்ளார். அவருக்கு நடத்தப்பட்ட முதற்கட்ட சோதனையில் விந்தணுக்கள் எதுவும் இல்லை என்பதும், விரைப்பைகள் இரண்டும் சரியான இடத்தில் இறங்காமல் வயிற்றுக்குள்ளேயே இருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து டாக்டர்கள் அவருக்குக் மரபணு மற்றும் ஸ்கேனிங் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
அந்த ஸ்கேன் ரிப்போர்ட்டைப் பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியில் உறைந்துபோயினர். அந்த 26 வயது ஆணின் உடலுக்குள் பெண்களுக்கே உரித்தான கர்ப்பப்பை மற்றும் ஃபலோபியன் குழாய்கள் போன்ற உறுப்புகள் இருப்பது வெளிச்சத்திற்கு வந்தது. மருத்துவ உலகிலேயே மிகவும் அரிய வகை பிறவிக் குறைபாடான இச்சம்பவம் தற்போது சோஷியல் மீடியாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
