வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா உதுப் போனி எம்மின் புகழ்பெற்ற ‘ராஸ்புடின்’ பாடலைத் தனது தனித்துவமான குரலில் பாடிய வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.
பெங்களூருவில் நடைபெற்ற ‘டைனமைட் டிஸ்கோ கிளப்’ இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்ட மூத்த பாடகி உஷா உதுப், தனது வழக்கமான பாரம்பரியச் சேலை, பெரிய பொட்டு மற்றும் அணிகலன்களுடன் மேடையேறினார். அப்போது அவர் பாடிய போனி எம்மின் ‘ராஸ்புடின்’ டிஸ்கோ பாடல் அரங்கில் இருந்தவர்களை மெய்சிலிர்க்க வைத்தது. மேலும் அடேலின் ‘ஸ்கைஃபால்’ மற்றும் குளோரியா கேனரின் ‘ஐ வில் சர்வைவ்’ போன்ற உலகப் புகழ்பெற்ற பாடல்களையும் அவர் தனது பாணியில் பாடி அசத்தினார்.
இந்தச் சிறப்பான கச்சேரியின் வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து, “சிலர் தங்கள் தலைமுறைக்கு எப்போதும் முன்னோடிகளாக இருப்பார்கள்; உஷா உதுப் ஒரு உண்மையான ராக்ஸ்டார்” என நெட்டிசன்கள் தங்களது பாராட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
