ஈரானிடம் மண்டியிடும் அமெரிக்கா… வேறு வழியே இல்லாமல் டிரம்ப் எடுத்த திடீர் முடிவு…. அதிர்ச்சியில் உலக நாடுகள்….!

Spread the love

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்து வரும் போர், உலகளாவிய எரிசக்தி சந்தையில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரானின் பதிலடித் தாக்குதல்கள் மற்றும் உலகின் மிக முக்கியமான கடல்வழிப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) ஈரான் முடக்கியுள்ளதால், கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை பேரல் ஒன்றுக்கு 100 டாலரை கடந்துள்ளதோடு, அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளிலும் பெட்ரோல், டீசல் விலை கிடுகிடுவென உயர்ந்து பொருளாதார நெருக்கடியை உருவாக்கியுள்ளது.

இந்த இக்கட்டான சூழலைச் சமாளிக்க, ஈரான் மீதான கச்சா எண்ணெய் ஏற்றுமதித் தடைகளை தற்காலிகமாக நீக்க அமெரிக்கா தற்போது முன்வந்துள்ளது. ஈரானின் ஆக்ரோஷமான தாக்குதலால் சவுதி அரேபியா மற்றும் கத்தாரின் எரிசக்தி உள்கட்டமைப்புகள் சேதமடைந்துள்ள நிலையில், சந்தையில் நிலவும் தட்டுப்பாட்டைப் போக்க வேறு வழியின்றி அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கருதப்படுகிறது. சுமார் 14 கோடி பேரல் ஈரான் கச்சா எண்ணெய் கடலில் முடங்கிக் கிடப்பதாகவும், அதைச் சந்தைக்குக் கொண்டு வருவதன் மூலம் விலை உயர்வைக்கட்டுப்படுத்த முடியும் என்றும் அமெரிக்காவின் கருவூலத் துறை அமைச்சர் ஸ்காட் பெசன்ட் தெரிவித்துள்ளார்.

ஈரானின் இந்த அதிரடித் திருப்பம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நிர்வாகத்திற்குப் பெரும் சவாலாக மாறியுள்ளது. ஒருபுறம் ஈரான் மீது பொருளாதாரத் தடைகளை விதித்து அந்நாட்டை முடக்க நினைத்த அமெரிக்கா, மறுபுறம் உள்நாட்டு எரிபொருள் விலை உயர்வு மற்றும் நட்பு நாடுகளின் பாதிப்பைக் கருதி தற்போது பணிந்து போகும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, ரஷ்யா மீதான தடையைத் தளர்த்தியும் கச்சா எண்ணெய் தேவை பூர்த்தியாகாத நிலையில், ஈரானிடம் காட்டும் இந்த மென்மையான போக்கு சர்வதேச அரசியலில் ஈரானுக்குக் கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

இந்தியாவைப் பொறுத்தவரை இது ஒரு சாதகமான சூழலாக அமைய வாய்ப்புள்ளது. ஈரான் மீதான தடைகளால் சவுதி மற்றும் ஈராக் நாடுகளை அதிகம் சார்ந்திருந்த இந்தியா, இனி ஈரானிடம் இருந்து மீண்டும் குறைந்த விலையில் கச்சா எண்ணெயைப் பெறும் வாய்ப்பு உருவாகலாம். அமெரிக்காவின் இந்தத் திடீர் மனமாற்றம் போரின் திசையை மாற்றுமா அல்லது தற்காலிகப் பொருளாதாரச் சமரசமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். எவ்வாறாயினும், எரிசக்தி அரசியலில் ஈரான் தற்போது அமெரிக்காவிற்குப் பலமான ‘செக்’ வைத்துள்ளது உறுதி.

Nanthini

Recent Posts

“யாரைக் கேட்டு அடிச்சீங்க.?” காதல் விவகாரம்.. போலீஸ் ஆய்வாளார் – தவெக MLA இடையே மோதல்.. பெரும் பரபரப்பு..!!

சென்னை ராயபுரத்தில், கடந்த 8 வருடங்களாக காதலித்துவிட்டு ஏமாற்றிய காதலனின் திருமணத்தை இளம்பெண் ஒருவர் நேரில் சென்று தடுத்து நிறுத்தி…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: 15 IPS அதிகாரிகள் அதிரடி மாற்றம்… முதல்வர் விஜய் உத்தரவு..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக அரசு, காவல்துறையில் நிர்வாகத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 15 ஐபிஎஸ் (IPS) அதிகாரிகளை அதிரடியாக…

3 மணத்தியாலங்கள் ago

“நள்ளிரவு வரை மீட்டிங்.. ஃபீல்டுக்கு போக முடியல!”.. கதறும் உளவுத்துறை போலீஸ்.. கீழ்நிலை போலீஸார் கடும் அதிருப்தி…!!!

சட்டம்-ஒழுங்கு பிரிவில் பணியாற்றிய அதிகாரிகளை உளவுத்துறையில் நியமித்ததற்கு, அந்தத் துறையில் நீண்டகாலமாகப் பணியாற்றும் போலீஸாரிடையே ஏற்கனவே அதிருப்திக் குரல்கள் எழுந்திருந்தன.…

3 மணத்தியாலங்கள் ago

BIG BREAKING: டாஸ்மாக் கடைகளில் போடப்பட்ட முதல் உத்தரவு நிறுத்தம்… பெரும் அதிர்ச்சி ..!!

முதலமைச்சர் விஜய் தலைமையிலான புதிய அரசு, தமிழ்நாட்டில் வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகில் 500…

3 மணத்தியாலங்கள் ago

பட்டப்பகலில் 4 வயது சிறுமி கடத்தல்… தாத்தா, பாட்டியின் அதிரடி போராட்டத்தையும் மீறி காரில் தூக்கிச் சென்ற கும்பல்.. சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு..!!

பஞ்சாப் மாநிலம் மொஹாலி மாவட்டத்தில் உள்ள குராலி பகுதியில், நான்கு வயது சிறுமி ஒருவர் பட்டப்பகலில் கடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம்…

3 மணத்தியாலங்கள் ago

“அவன் யாரென்றே எனக்குத் தெரியாது” தவெக-வைச் சுற்றிய மோசடிப் புகார்… அமைச்சர் செங்கோட்டையன் சுளீர் பதில்..!!

மோசடி வழக்கில் தேடப்பட்டு வரும் நபர் ஒருவர், தவெக அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் முன்னிலையில் கட்சியில் இணைந்ததாக சமூக ஊடகங்களிலும் செய்தி…

3 மணத்தியாலங்கள் ago