ஐயோ… எங்க ஓடினாலும் விடமாட்டோம்… போலி பெயரில் பதுங்கிய டாப் மோஸ்ட் இந்திய கேங்ஸ்டர்கள்… தூக்கிய அமெரிக்க போலீஸ்… இணையத்தில் வைரல்…!

By Swetha on ஐப்பசி 25, 2026

Spread the love

இந்தியாவில் தேடப்பட்டு வந்த பிரபல குற்றவாளிகளான ஹிமான்ஷு பாவ் மற்றும் நீரஜ் பரித்புரியா ஆகிய இருவரும், போலியான பாஸ்போர்ட் மற்றும் தவறான அடையாளங்களைப் பயன்படுத்தி சட்ட அமலாக்கத் துறையினரிடமிருந்து தப்பித்து வந்த நிலையில், கடந்த அக்டோபர் 22 அன்று அமெரிக்காவில் கைது செய்யப்பட்டனர்.

இவர்கள் தங்களின் உண்மையான அடையாளங்களை மறைத்து, ஹிமான்ஷு பாவ் “ஹிமான்ஷு சிக்ரோஹா” என்ற பெயரிலும், நீரஜ் பரித்புரியா “நீரஜ் கௌசிக்” என்ற பெயரிலும் பயணம் மேற்கொண்டு தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

   

கொலை, அச்சுறுத்தல் மற்றும் கப்பம் கோருதல் என இருவர் மீதும் இந்தியாவில் பல்வேறு கடுமையான குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. தற்போது இருவரையும் இந்தியாவிற்கு நாடு கடத்துவதற்கான சட்டப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய புலனாய்வு அமைப்புகள் அமெரிக்க அதிகாரிகளுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்றி வருகின்றன.