அந்த பயம் இருக்கட்டும்…. மிரண்டு ஓடிய அமெரிக்க போர்க்கப்பல்கள்?…. ஈரானின் ‘காசிம் பஷீர்’ கொடுத்த மரண பயம்…. அதிர்ச்சியில் உலக நாடுகள்….!

By Nanthini on புரட்டாதி 27, 2026

Spread the love

ஈரானை முற்றுகையிடும் நோக்கில் ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் நிலைநிறுத்தப்பட்டிருந்த பெரும்பாலான அமெரிக்க போர்க்கப்பல்கள், தற்போது ஈரானிய கடற்கரையிலிருந்து பின்வாங்கியுள்ளதாக செயற்கைக்கோள் படங்கள் தகவல்களை வெளியிட்டுள்ளன. செப்டம்பர் தொடக்கத்திலிருந்து எடுக்கப்பட்ட சென்டினல்-2 செயற்கைக்கோள் படங்களில், யுஎஸ்எஸ் ஜார்ஜ் வாஷிங்டன், யுஎஸ்எஸ் பாக்சர் மற்றும் அவற்றின் பாதுகாப்பிற்காக வந்த அழிப்புக் கப்பல்கள் எதுவும் வழக்கமான பகுதிகளில் காணப்படவில்லை. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் நிலவி வரும் சூழலில், முன்னணி தாக்குதல் எல்லைகளிலிருந்து அமெரிக்கக் கப்பல்கள் பின்வாங்கியுள்ளது சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க கப்பல்களின் இந்த திடீர் நகர்வுக்கு ஈரானின் புதிய ஏவுகணை சோதனையே முக்கிய காரணமாகப் பார்க்கப்படுகிறது. செப்டம்பர் மாதத் தொடக்கத்தில், ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல் படை (IRGC) ‘காசிம் பஷீர்’ என்ற புதிய கப்பல் எதிர்ப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை வெற்றிகரமாகச் சோதித்தது. சுமார் 1,200 கி.மீ தூரம் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்ட இந்த ஏவுகணை, ஓமன் வளைகுடா மற்றும் அரபிக்கடலின் பெரும் பகுதியை தனது தாக்குதல் எல்லைக்குள் கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பிராந்தியத்தில் இருந்த அமெரிக்க போர்க்கப்பல்களுக்கு நேரடி பாதுகாப்பு அச்சுறுத்தல் உருவானது.

   

இதற்கிடையே, செப்டம்பர் 5 அன்று ஈரானிய பாலிஸ்டிக் ஏவுகணைகள் அமெரிக்காவின் ஒரு விமானம் தாங்கி கப்பலையும் மற்றும் வழிகாட்டப்பட்ட ஏவுகணை தகர்ப்புக் கப்பலையும் இலக்கு வைத்துத் தாக்கியதாக அமெரிக்க மத்திய கட்டளைப் பிரிவு (CENTCOM) உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும், ஈரானின் இந்தத் தாக்குதல்களைத் தங்கள் கப்பல்கள் வெற்றிகரமாக முறியடித்துவிட்டதாகவும், அமெரிக்கப் படைகளுக்கு எந்தவிதமான உயிரிழப்போ அல்லது கப்பல்களுக்கு நிரந்தர சேதமோ ஏற்படவில்லை என்றும் அமெரிக்கத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

   

தாக்குதலுக்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளில், அமெரிக்கப் போர்க்கப்பலை அச்சுறுத்தியது ஈரானின் ‘காசெம் பஷீர்’ ஏவுகணைதான் என்பது உறுதியானது. இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டுப் பேசிய ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்புக் குழுவின் செயலாளர் மொஹ்சென் ரெஸாயி, தங்கள் நாட்டின் சக்திவாய்ந்த ஏவுகணை தாக்குதல் அமெரிக்கப் படைகளுக்கு பெரும் நெருக்கடியைக் கொடுத்து அவர்களைப் பின்வாங்கச் செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கப் படைகள் மத்திய கிழக்கு பிராந்தியத்தை விட்டு முழுமையாக வெளியேறாவிட்டாலும், ஈரானின் ஏவுகணை வரம்பிலிருந்து த தப்பவே கப்பல்கள் நகர்த்தப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது.