அமெரிக்காவில் லாட்டரி சீட்டு வாங்கியதை மறந்துவிட்டு, கடைசி நேரத்தில் பழைய பேண்ட் பாக்கெட்டில் இருந்த சீட்டின் மூலம் ரூ.57 கோடி வென்ற நபரின் சுவாரசியமான கதை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அமெரிக்காவின் நியூ ஜெர்சி மாகாணத்தைச் சேர்ந்த ஒருவர், கடந்த 2025-ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி அங்குள்ள ஒரு எரிவாயு விற்பனை நிலையத்தில் ‘பிக்-6’ (Pick-6) என்ற லாட்டரி சீட்டை வாங்கியுள்ளார். சீட்டை வாங்கிய கையோடு அதை வீட்டிற்கு எடுத்துச் சென்ற அவர், அப்படியே அதைப்பற்றி மறந்துவிட்டு தனது அன்றாட வாழ்க்கையைக் கவனிக்கத் தொடங்கிவிட்டார்.
அவர் மறந்துபோன அந்த லாட்டரி சீட்டிற்கு அதிர்ஷ்டவசமாக 5.9 மில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் ரூ.57 கோடி மெகா பரிசுத்தொகை விழுந்தது. ஆனால், பரிசு விழுந்த விஷயமே தெரியாமல் அந்த நபர் இருந்ததால், நீண்ட நாட்களாக அந்தப் பணத்தைக் கோர யாரும் முன்வரவில்லை. அமெரிக்க சட்டப்படி, லாட்டரி பரிசுத்தொகையை ஓராண்டுக்குள் பெற்றாக வேண்டும்; இல்லையெனில் அந்தப் பணம் ரத்தாகிவிடும். காலக்கெடு முடிவடைய சில நாட்களே இருந்த நிலையில், லாட்டரி நிறுவனம் உண்மையான வெற்றியாளரை எச்சரிக்கும் வகையில் பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது.
இந்த அறிவிப்பைப் பார்த்த பின்புதான், நியூ ஜெர்சியைச் சேர்ந்த அந்த நபருக்குத் தான் வாங்கிய லாட்டரிக்குத்தான் ரூ.57 கோடி பரிசு விழுந்திருக்கிறது என்ற உண்மை உறைத்தது. மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த அவருக்கு அடுத்த கணமே பேரதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில், அந்த லாட்டரி சீட்டை அவர் எங்கு வைத்தார் என்றே தெரியவில்லை. அதோடு, இன்னும் 8 நாட்களுக்குள் அந்த சீட்டைக் காண்பித்தால் மட்டுமே பரிசுத்தொகை கிடைக்கும் என்ற இக்கட்டான சூழ்நிலையும் உருவானதால் அவர் கடும் பதற்றமடைந்தார். லாட்டரி வாங்கிய ஏஜென்சியைத் தொடர்புகொண்டபோது, அவர்கள் வீட்டை முழுமையாகத் தேடிப் பார்க்குமாறு அறிவுறுத்தினர்.
இதையடுத்து, அவர் தனது வீட்டின் அலமாரிகள், சமையலறை எனப் புகுந்து புகுந்து தேடினார். எங்கு தேடியும் கிடைக்காததால் விரக்தியடைந்த அவர், இறுதியாகத் தனது துணிமணிகளை ஒவ்வொன்றாக எடுத்துச் சோதிக்கத் தொடங்கினார். அப்போது, அவர் அலட்சியமாகப் போட்டு வைத்திருந்த ஒரு பழைய பேண்ட் பாக்கெட்டுக்குள் சுருண்ட நிலையில் அந்த அதிர்ஷ்ட லாட்டரி சீட்டு ஒளிந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. பதற்றத்துடன் அதில் இருந்த எண்களைச் சரிபார்த்தபோது, அது பரிசு விழுந்த அதே எண்கள்தான் என்பது உறுதியானது. காலக்கெடு முடிவதற்குள் சரியான நேரத்தில் தனது பழைய பேண்ட் கைக்கொடுத்ததால், ஒரே நாளில் அவர் கோடீஸ்வரராகி நிம்மதிப் பெருமூச்சு விட்டார்.
கோவை மாவட்டம் பேரூர் மாதம்பட்டி பகுதியில் நடைபெற்ற சுயமரியாதை திருமண நிகழ்வில் கலந்து கொண்ட திமுக துணை பொதுச் செயலாளர்…
தமிழக வெற்றிக் கழகம் (தவெக) சட்டமன்றத்தில் தனிப்பெரும்பான்மை பெறாத நிலையில், காங்கிரஸ், இடதுசாரிகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் மற்றும்…
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தென்காசி மேற்கு மாவட்ட மருத்துவ அணி நிர்வாகிகள்…
சிவகங்கை அருகே 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்த விரக்தியில் புதுக்குளத்தைச் சேர்ந்த மாணவி சலினியா தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம்…
தமிழகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்படும் மாதந்தோறும் மின்கட்டணம் செலுத்தும் முறை, மின்சார வாரியத்தில் உள்ள காலி பணியிடங்கள் நிரப்பப்பட்ட பிறகே…
அதிமுகவில் இணைவதற்கு தவெகவின் ஆதவ் அர்ஜுனா தீவிர முயற்சி மேற்கொண்டதாக முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் சென்னையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில்…