“அவங்க கதை முடிஞ்சது… ஈரான் ஒரு செத்த பிணம்”…. அதிபர் ட்ரம்பின் பகிரங்க பிரகடனம்…. உலகை உலுக்கிய பதிவு…. காலையிலேயே ஷாக்…!

By Nanthini on புரட்டாதி 1, 2026

Spread the love

அமெரிக்க இலக்குகள் மற்றும் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள அமெரிக்க தளங்கள் மீது ஈரான் நடத்தி வரும் தொடர் தாக்குதல்கள் அமெரிக்க அதிபர் டொனாலட் ட்ரம்பை கோபத்திற்கு உள்ளாக்கியுள்ளன. இதன் வெளிப்பாடாக, தனது ‘ட்ரூத் சோசியல்’ (Truth Social) சமூக வலைதளப் பக்கத்தில் ஈரான் குறித்து மிகக் கடுமையான பதிவொன்றை வெளியிட்டுள்ளார் ட்ரம்ப். அதில் ஈரான் அதிகாரப்பூர்வமாக ஒரு தோல்வியடைந்த நாடு என்றும், அது முற்றிலும் அழிந்துபோய்விட்டது (Dead) என்றும் அவர் பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

அதிபர் ட்ரம்ப் தனது சமூக வலைதளப் பதிவில் ஈரானின் தற்போதைய இராணுவ மற்றும் பொருளாதார நிலையை கடுமையாக விமர்சித்துள்ளார். “ஈரானிடம் தற்போது சொந்தமாக கடற்படையோ, விமானப்படையோ அல்லது நிலையான நாணயமோ இல்லை. அவர்களால் தங்கள் சொந்த ராணுவ வீரர்களுக்கும் காவலர்களுக்கும் கூட ஊதியம் வழங்க முடியாத சூழல் நிலவுகிறது; அங்கு பணவீக்கம் 300% ஆக உயர்ந்துள்ளது. ஈரானின் தலைமை முற்றிலும் சீர்குலைந்துள்ளதால், அவர்களால் தங்கள் நாட்டை முறையாகப் பிரதிநிதித்துவப்படுத்த முடியவில்லை” என்று ட்ரம்ப் தனது கோபத்தைப் பதிவு செய்துள்ளார்.

   

மேலும், ஈரான் நிர்வாகம் மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாகக் குற்றம் சாட்டியுள்ள ட்ரம்ப், ஈரானிடம் அமெரிக்காவைப் பற்றிய தவறான தகவல்கள் மட்டுமே இருப்பதாகக் கூறியுள்ளார். ஈரான் அரசு தங்கள் நாட்டின் சொந்தப் போராட்டக்காரர்களையேக் கொன்று குவிப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இதுவரை ஒரு லட்சத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளதாகவும், இந்த மனிதகுலத்திற்கு எதிரான போர்க்குற்றங்களுக்காக ஈரானிய தலைவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

   

இதனிடையே, ஜோர்டானில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்களைக் குறிவைத்து ஈரான் நடத்திய ஏவுகணைத் தாக்குதல்களுக்கு அமெரிக்கா கடுமையான பதிலடி கொடுக்கும் என ஃபாக்ஸ் நியூஸுக்கு (Fox News) அளித்த பேட்டியில் ட்ரம்ப் எச்சரித்துள்ளார். அமெரிக்கப் படைகள் வான் பாதுகாப்பு அரண்கள் மூலம் பெரும்பாலான ஏவுகணைகளை வெற்றிகரமாக இடைமறித்துள்ளன என்று குறிப்பிட்ட அவர், ஈரானிய தடைகள் அவர்களின் பொருளாதாரத்தில் பலத்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதால் அவர்கள் பேச்சுவார்த்தை நடத்த தீவிர ஆர்வம் காட்டி வருவதாகவும், எனினும் பேச்சுவார்த்தை உடன்பாட்டில் தனக்கு முழு நம்பிக்கை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்