அமெரிக்காவின் தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மையத்தின் (NCTC) இயக்குநராக இருந்த ஜோ கென்ட் (Joe Kent), ஈரான் உடனான போருக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். “என்னால் எனது மனசாட்சிக்கு விரோதமாகச் செயல்பட முடியாது” என்று குறிப்பிட்டுள்ள அவர், அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு எழுதிய கடிதத்தில், இந்த போர் தேவையற்றது என்றும் ஈரானால் அமெரிக்காவிற்கு உடனடி ஆபத்து ஏதுமில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த போரானது அமெரிக்காவின் நலனுக்காகத் தொடங்கப்படவில்லை என்றும், இஸ்ரேல் மற்றும் அதன் செல்வாக்கு மிக்க ஆதரவு குழுக்களின் அழுத்தத்தின் காரணமாகவே அமெரிக்கா இதில் தள்ளப்பட்டுள்ளது என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார். ட்ரம்ப் நிர்வாகத்தில் ஈரான் போருக்கு எதிர்ப்பு தெரிவித்து விலகிய முதல் மூத்த அதிகாரி இவராவார். ஈரானிய பாதுகாப்பு அதிகாரி அலி லாரிஜானி மற்றும் புரட்சிகர காவல்படையின் மூத்த தளபதி கோலம் ரேசா சுலைமானி ஆகியோர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து போர் பதற்றம் உச்சமடைந்துள்ள நிலையில் இந்த ராஜினாமா நிகழ்ந்துள்ளது.
ஜோ கென்ட்டின் இந்த முடிவை விமர்சித்துள்ள அதிபர் ட்ரம்ப், அவர் பாதுகாப்பில் பலவீனமானவர் என்றும் அவர் வெளியேறுவது நல்லது என்றும் கூறியுள்ளார். முன்னாள் ராணுவ வீரரான ஜோ கென்ட், ஈராக் போருடன் தற்போதைய சூழலை ஒப்பிட்டு, ஆதாரமற்ற காரணங்களுக்காக அமெரிக்கா மீண்டும் ஒரு போரில் ஈடுபடுவதாகக் கவலை தெரிவித்துள்ளார். இந்த போர் காரணமாக இதுவரை ஈரானில் 1,300 பேரும், லெபனானில் 880 பேரும் உயிரிழந்துள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது 'ட்ரூத் சோஷியல்' (Truth Social) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், உலக நாடுகளின் பயன்பாட்டிற்காக…
போலாந்தில் விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் புகுந்து பயிர்களையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் காட்டுப்பன்றிகளை விரட்டுவதற்காக 'எட்வர்ட் வார்ச்சோக்கி' (Edward Warchocki) என்ற நவீன ரோபோ…
பாட்டாளி மக்கள் கட்சியின் தேர்தல் பரப்புரைகளில் தன்னுடைய புகைப்படத்தைப் பயன்படுத்தத் தடை விதிக்கக் கோரி, அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ்…
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவர் விஜய், 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டுப் பெண்களுக்கு ஒரு முக்கிய வேண்டுகோளை விடுத்துள்ளார்.…
தமிழக வெற்றிக் கழகத் தலைவரும் நடிகருமான விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல்கள் மற்றும் தேர்தல் நடத்தை…
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…