தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி சூடுபிடிக்கத் தொடங்கியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) எடுத்துள்ள அதிரடி முடிவுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளன. தவெக வரும் தேர்தலில் யாருடனும் கூட்டணி வைக்காமல், தமிழகத்தின் அனைத்து 234 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிடப் போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கட்சியின் அடிப்படை கட்டமைப்பை வலுப்படுத்துவதில் தீவிரம் காட்டி வரும் விஜய், களத்தில் இறங்கி நேரடியாகப் பணியாற்றுவதன் மூலம் மற்ற திராவிடக் கட்சிகளுக்குச் சவால் விடுக்கத் திட்டமிட்டுள்ளார்.
கட்சியின் தலைவர் விஜய் எங்கு போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வந்த நிலையில், அவர் வட சென்னையின் பெரம்பூர் தொகுதியைத் தேர்வு செய்துள்ளதாகத் தெரிகிறது. பின்தங்கிய பகுதியாகக் கருதப்படும் வட சென்னையை சிங்கப்பூர் போல மாற்றிக் காட்டுவேன் என்ற முழக்கத்தோடு அவர் பெரம்பூரில் களம் காணத் தயாராகி வருகிறார். இது மட்டுமன்றி, சென்னை போன்ற முக்கியமான நகர்ப்புற தொகுதிகளில் கட்சியின் செல்வாக்கை நிரூபிக்க விஜய் ஆர்வம் காட்டி வருவதாக கட்சி நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
விஜய்க்கு அடுத்தபடியாகக் கட்சியில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் ஆதவ் அர்ஜுனா மற்றும் புஸ்ஸி ஆனந்த் ஆகியோரின் தேர்தல் களம் குறித்தும் தகவல்கள் கசிந்துள்ளன. கட்சியின் தேர்தல் பரப்புரை மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா, உதயநிதி ஸ்டாலினை எதிர்த்துப் போட்டியிடும் வகையில் அல்லது செல்வாக்கு மிக்க ஒரு தொகுதியில் களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கட்சியின் நீண்டகால விசுவாசியான பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தென் சென்னை அல்லது அவரது சொந்த செல்வாக்கு உள்ள ஏதேனும் ஒரு முக்கியத் தொகுதியில் போட்டியிட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
திமுக மற்றும் அதிமுக ஆகிய இருபெரும் துருவங்களுக்கு மாற்றாகத் தன்னை முன்னிறுத்தும் விஜய், தற்போது வேட்பாளர் நேர்காணல் மற்றும் பூத் கமிட்டி பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுள்ளார். 2026 தேர்தலில் தவெக தனித்துப் போட்டியிடுவதால், வாக்குகள் சிதறும் சூழல் உருவாகலாம் என்றும், இது தமிழக தேர்தல் வரலாற்றில் ஒரு புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். “நாளை நமதே” என்ற நம்பிக்கையில் விஜய் எடுத்துள்ள இந்தத் தனிப்பாதை, கோட்டையை நோக்கிய பயணத்தில் அவருக்குக் கைகொடுக்குமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…
தமிழக வெற்றிக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட நிர்வாகியாக இருந்த அஜிதா ஆக்னல், அக்கட்சியிலிருந்து விலகி அண்மையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்…
சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த 68 வயது முதியவர் ராஜூ, கடந்த 2021-ஆம் ஆண்டு…
சட்டவிரோதமாக இணையதளங்களில் கசிந்த 'ஜன நாயகன்' திரைப்படம், சில உள்ளூர் கேபிள் டிவி சேனல்களிலும் அனுமதியின்றி ஒளிபரப்பப்பட்ட சம்பவம் பெரும்…
மேற்கு ஆசியாவில் தீவிரமடைந்துள்ள போர்ச் சூழல், உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகச் சங்கிலியில் பெரும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஈரானை…