தீப்பற்றும் மத்திய கிழக்கு… உச்சக்கட்ட அதிர்ச்சி… பாலிஸ்டிக் ஏவுகணை தாக்குதல்… பதிலடி கொடுக்கும் அமெரிக்கா… நிலைகுலைந்த ஈரான்… நடுங்கும் உலக நாடுகள்…!

By Visaka on ஆடி 30, 2026

Spread the love

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் உத்தரவின்பேரில், ஈரான் மீது அமெரிக்கப் படைகள் இன்று அதிகாலை முதல் கடுமையான வான்வழித் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளன. ஜோர்டனில் உள்ள அமெரிக்க ராணுவத் தளம் மீது ஈரான் பாலிஸ்டிக் ஏவுகணைகளை வீசித் தாக்குதல் நடத்தியதற்குப் பதிலடியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. எதிர்கால அச்சுறுத்தல்களை முற்றிலும் தவிர்க்கும் நோக்கில் ஈரான் மீது இந்த நேரடித் தாக்குதல் நடத்தப்படுவதாக அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரான் மீதான நேரடித் தாக்குதல்களுக்கு மேலதிகமாக, ஈராக் நாட்டில் இயங்கி வரும் ஈரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் மீதும் அமெரிக்க மற்றும் சவூதிப் படைகள் கூட்டாகக் களமிறங்கித் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. அமெரிக்கப் படைகள் மீதான தாக்குதல்களை ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது என எச்சரித்துள்ள டிரம்ப், ஈரானுக்கு எதிராக மிகக்கடுமையான பதிலடி கொடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். இதனால் மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் உச்சக்கட்டப் போர் பதற்றம் உருவாகியுள்ளது.

   

இந்த திடீர் ராணுவ மோதல்களின் எதிரொலியாக, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 7 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளது. உலக நாடுகளைக் அச்சுறுத்தி வரும் இந்த விலை உயர்வு, இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகளின் பொருளாதாரத்தில் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் சர்வதேச அளவில் பெரும் கவலை ஏற்பட்டுள்ளது.