Categories: சினிமா

அய்யோ அந்த பொண்ணா?.. நடிக்கவே மாட்டேன்னு தெறித்து ஓடிய விஜயகாந்த்.. காரணத்தை போட்டுடைத்த ஊர்வசி..!

Spread the love

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிப்பு மற்றும் நகைச்சுவையால் எக்கச்சக்கமான ரசிகர்களின் ஃபேவரைட் நடிகையாக இன்றும் இறந்து கொண்டிருப்பவர் தான் நடிகை ஊர்வசி. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னடம் என பல மொழிகளில் டாப் நடிகர்களுடன் அவர்களுடைய நடிப்புக்கு ஈடு கொடுத்து தனது அசாத்திய நடிப்பால் அசத்தியவர். தமிழில் பாக்கியராஜ் இயக்கிய முந்தானை முடிச்சு என்ற திரைப்படம் மூலம் தான் கதாநாயகியாக சினிமா உலகிற்குள் நுழைந்தார். கவிதா ரஞ்சனி என்ற இயற்பெயர் கொண்ட இவர் சினிமாவுக்காக தன்னுடைய பெயரை ஊர்வசி என்று மாற்றிக் கொண்டார்.

பல சூப்பர் ஹீரோக்களுடன் நடித்த தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த ஊர்வசி கேரளா நடிகர் மனோஜ் ஜெயின் என்பவரை 2000 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு தேஜலக்ஷ்மி என்ற மகளும் உள்ளார். எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இருவருக்கும் இடையே ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக இருவரும் விவாகரத்து பெற்று பிரிந்தனர். மகள் தேஜலக்ஷ்மி தந்தை மனோஜுடன் வாழ்ந்து வருகிறார். 2013 ஆம் ஆண்டு சிவ பிரசாத் என்பவரை திருமணம் செய்து கொண்ட ஊர்வசி 43 வயதில் மகனுக்கு தாயானார். தற்போதும் ஊர்வசி பல திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார்.

இந்த நிலையில் ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் மறைந்த நடிகர் விஜயகாந்த் பற்றி பல சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். அதில், எப்போதுமே விஜயகாந்த் என்னை தங்கச்சி தங்கச்சி என்று தான் அழைப்பார். என் கூட இணைந்து இரண்டு திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ளார். நான் தான் ஹீரோயின் என்று சொன்னதும் என் கூட நடிக்கவே மாட்டேன்னு டைரக்டர் கிட்ட சொல்லிட்டாரு. தங்கச்சி என அவருடன் பழகி வருகிறேன் எப்படி எனக்கு ஜோடியாக ஊர்வசியை நினைக்க முடியும் என்ற ஒரு காரணத்தினால் நடிக்கவே மாட்டேன்னு சொல்லிட்டாரு.

அதன் பிறகு எல்லோரும் பேசி சம்மதிக்க வைத்து படத்தில் நடிக்க வைத்தார்கள். படத்துல நடிக்கும் போது கூட அவருடைய கலர் என்ன என்னுடைய கலர் என்ன, கிட்ட நிற்கவே முடியல என்றெல்லாம் கலர வைத்து கிண்டல் பண்ணி பேசுவாரு. படத்துல பல காட்சிகளின் அவர் என்ன நேருக்கு நேர் பார்த்து பேசவே மாட்டாரு. அந்த அளவுக்கு நல்ல குணம் கொண்ட மனுஷன் என்று ஊர்வசி சமீபத்தில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார்.

Nanthini

Recent Posts

அய்யய்யோ… ரீல்ஸ் மோகத்தால் நேர்ந்த கொடூரம்… கடற்கரையில் கார் சாகசம்… வாகனத்தின் அடியில் சிக்கி.. 14 வயது சிறுவன் பரிதாப பலி… நெஞ்சை பதறவைக்கும் சோகம்…!!

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள சாமக்கால் கடற்கரையில், சமூக வலைதளங்களில் 'ரீல்ஸ்' வீடியோ பதிவேற்றுவதற்காக எடுக்கப்பட்ட சாகச முயற்சி…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நடுரோட்டில் கதறிய இளம்பெண்… தேனீக்கள் தாக்கியதில் சிதறி ஓடிய கூட்டம்… இணையத்தில் வைரல் வீடியோ…!

பொதுமக்கள் நடமாட்டம் மிகுந்த தெருவில், இளம் பெண் ஒருவரை திடீரென தேனீக்கள் கூட்டம் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

2 மணத்தியாலங்கள் ago

ஐயோ… காப்பாத்துங்க… நொடிப் பொழுதில் நசுங்கிய ஆம்னி… மரணத்தின் பிடியில் ஓட்டுநர்… கொட்டாரக்கரையில் அதிர்ச்சி விபத்து…!!

கொட்டாரக்கரை தமராசேரி முக்கு அருகே வியாழக்கிழமை மாலை எதிரே வந்த கன்டெய்னர் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதி…

3 மணத்தியாலங்கள் ago

பஸ் ஸ்டாண்ட் வரைதானே… ஏறு… நடுரோட்டில் பெல்ட்டால் வெறித்தனமான தாக்குதல்… ரூ 7.45 லட்சத்துடன் மாயமான கும்பல்… இணையத்தில் ஷாக்கிங் வீடியோ…!

சுல்தான்பூர் மாவட்டம் அம்ஹத் சௌக் பகுதியில், தொழிலதிபர் ஷஷாங்க் கெளஷலை பேருந்து நிலையத்தில் இறக்கிவிடுவதாகக் கூறி காரில் ஏற்றியுள்ளனர். அம்ஹத்…

3 மணத்தியாலங்கள் ago

பிறந்தநாள் கொண்டாட்டம்…! “முகத்தில் கேக் பூசிய நண்பன் குத்தி கொலை…” நண்பர்கள் தடுத்தும் கேட்காமல் வெறிச்செயல்… நடுங்க வைக்கும் பகீர் சம்பவம்…!!

ஜம்முவின் ஜானிபூர் பகுதியில் உள்ள லோயர் ரூப் நகர் சாலையில் நீரஜ் என்ற வாலிபர், தனது தம்பி ரிஷு மற்றும்…

3 மணத்தியாலங்கள் ago

ஐயோ… பகல் நேரத்தில் நடுரோட்டில் ரத்த வெள்ளம்… கர்ப்பிணி யூடியூபரின் கணவர் கொடூரக் கொலை… நெஞ்சை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

தன் மனைவி வைஷ்ணவியைக் கொலை செய்த வழக்கில் பிணையில் வெளியே வந்த ஹரிபாபு என்ற நபர், நிஜாமாபாத் ஆர்.ஆர் எக்ஸ்…

3 மணத்தியாலங்கள் ago