தமிழ் திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் நடிகை சங்கீதா. 1997 ஆம் ஆண்டு வெளியான கங்கோத்ரி என்ற மலையாள திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமானார். இதனைத் தொடர்ந்து 1998 ஆம் ஆண்டு வெளியான காதலே நிம்மதி படம் மூலமாக கோலிவுட்டில் என்ட்ரி கொடுத்தார். இதனைத் தொடர்ந்து தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என பல்வேறு மொழிகளில் இவர் பிஸியாக நடித்து வந்தார். குறிப்பாக உயிர், தனம் மற்றும் நேபாளி என வித்தியாசமான கதை அம்சம் கொண்ட படங்களில் இவருடைய நடிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டப்பட்டது.
நடிகை சங்கீதாவுக்கு கோலிவுட்டில் மிகப்பெரிய திருப்புமுனையை கொடுத்த படம் தான் பிதாமகன். பாலா இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் அவருடைய நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தது மட்டுமல்லாமல் சிறந்த துணை நடிகைக்கான தமிழக அரசின் மாநில விருதும் கிடைத்தது. சினிமாவில் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு பாடகர் கிரிஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
இந்த தம்பதிகளுக்கு ஒரு பெண் குழந்தையும் உள்ளது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து குணசித்திர வேடங்களில் நடித்து வரும் சங்கீதா சின்னத்திரை நடன நிகழ்ச்சிகளிலும் நடுவராக செயல்பட்டு வந்தார். அது மட்டுமல்லாமல் எங்க வீட்டு மாப்பிள்ளை என்ற நிகழ்ச்சியை கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சிக்காக இவர் தொகுத்து வழங்கினார்.
இந்த நிலையில் சங்கீதா சமீபத்தில் கலந்து சினிமா தோழிகளுடனும் குடும்பத்தினருடனும் சேர்ந்து தீபாவளி பண்டிகையை கொண்டாடியுள்ளார். அது தொடர்பான வீடியோவை அவர் பகிர்ந்து உள்ள நிலையில் அந்த வீடியோவில் சங்கீதா மற்றும் கிரிஷ் தம்பதியின் மகள் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு வளர்ந்து நிற்கிறார். அந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் சங்கீதாவின் மகள் இப்படி வளந்துட்டாரே என்று கூறி வருகிறார்கள்.
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…