இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகமாகிவிட்டது. அதில் பெரும்பாலானோர் google pay, போன் பே உள்ளிட்ட UPI செயலிகளை பணப்பரிவர்த்தனைக்காக பயன்படுத்துகின்றனர். இப்படியான நிலையில் UPI விதிமுறைகளில் வருகின்ற ஆகஸ்ட் 1 முதல் புதிய மாற்றங்கள் நடைமுறைக்கு வர உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஒரு நாளைக்கு 50 முறை மட்டுமே இனி பேலன்ஸ் எவ்வளவு உள்ளது என்பதை செக் செய்ய முடியும். நாள் ஒன்றுக்கு 25 முறை thaan மொபைல் எண்ணில் வங்கி கணக்குகளின் பட்டியலை பார்க்க முடியும். Autopay பரிவர்த்தனைகளை குறிப்பிட்ட நேரங்களில் மட்டுமே செய்ய முடியும். இந்த புதிய விதிமுறைகள் அனைத்தும் google pay, phone pay, paytm போன்ற அனைத்து UPI செயலி பயனர்களுக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
