இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சியான் விக்ரம் நடித்த துருவ் விக்ரம் படம் பல ஆண்டுகளாக ரிலீஸ் செய்யப்படாமல் முடங்கி உள்ளது. இந்த படம் இந்த மாதம் 19ம் தேதி ரிலீஸ் ஆகும் என்ற தகவல் பரவியது. இதுகுறித்து இயக்குனர் கௌதம் மேனன் கூறியதாவது, கடந்த 2018ம் ஆண்டு இந்த படத்தை யூனிவர்ஸ் போன்று உருவாக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். எனினும் படத்தின் பிரச்சனைகளை தீர்க்கவே நீண்ட காலம் கடந்துவிட்டது.
எங்களுக்கு பணதேவை இருந்ததால் இந்த படத்திற்கு லியோ திரைப்படம் மிகவும் உதவிகரமாக இருந்தது. படத்தின் ரிலீஸை ஒட்டி நாங்கள் சில சட்ட ரீதியான பிரச்சினைகளை எதிர்கொண்டோம். அவற்றை ஒவ்வொன்றாக தீர்த்து வருகிறோம். தற்போதைக்கு ஒரே ஒரு பிரச்சனை தான் மீதம் உள்ளது. வரும் வாரத்தில் அதுவும் முடிக்கப்பட்டு விடும் என்று கௌதம் மேனன் கூறியிருக்கிறார். அதனால் விரைவில் துருவ நட்சத்திரம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம்.
