பெண்களே தேதி குறிச்சி வச்சிக்கோங்க…! 1,000 மகளிர் உரிமைத் தொகை.. வந்தது செம HAPPY NEWS..!!

By Soundarya on கார்த்திகை 25, 2025

Spread the love

தமிழகத்தில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ் குடும்ப தலைவிகளுக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் உரிமை தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஏராளமான பெண்கள் பயனடைந்து வரும் நிலையில் சில குடும்ப தலைவிகளின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டது. இதனால் அவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கும் விதமாக கடந்த மூன்று மாதங்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வந்தது. இந்த முகாம் மூலமாக மீண்டும் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் பயன் பெறுவதற்கு பலரும் புதிதாக விண்ணப்பித்தனர்.

இவர்களின் விவரங்கள் உறுதி செய்யப்பட்ட நிலையில் புதிதாக இணைந்துள்ளவர்களின் வங்கி கணக்கில் 1 ரூபாய் அனுப்பி பரிசோதிக்கும் நடைமுறையை அரசு தொடங்கி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் அரசு இதுவரை 30,000 கோடியை அரசு செலவிட்டுள்ளது. 2023 செப்.15 முதல் தற்போது வரை, பயனாளிகள் தலா 26,000 ரூபாய் பெற்றுள்ளனர். புதிதாக 28 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ள நிலையில், அவர்களில் தகுதியானோரின் பட்டியலை தயார் செய்யும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது. விடுபட்ட அனைவருக்கும் டிச.15 முதல் 1,000 ரூபாய் டெபாசிட் செய்யப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.