குட் நியூஸ்..! பொங்கல் பரிசாக ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.1000..? வெளியான அறிவிப்பு..!!

By Soundarya on மார்கழி 2, 2025

Spread the love
தமிழக அரசு பொங்கல் பண்டிகையை ஒட்டி, வருடந்தோறும் பொங்கல் பரிசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கி வருகிறது. இதனால் ஏழை எளிய மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். இந்நிலையில் அனைத்து குடும்ப அட்டை காரர்களுக்கும் பொங்கல் பரிசாக ரூ.1,000 வழங்க திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் பரிசு தொகுப்பில் அரிசி, சக்கரை, கரும்பு உள்ளிட்ட பொருட்களும் இடம் பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரூ.5,000 வழங்குவதாக தகவல் வெளியான நிலையில், அந்த தொகை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் பொதுமக்கள் காத்திருக்கின்றனர்.