“உயிருக்கு போராடிய நோயாளி”… ரீல்ஸ் பார்த்துக்கொண்டே ஆம்புலன்ஸ் டிரைவர் செய்த செயல்… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!

By Nanthini on ஐப்பசி 26, 2025

Spread the love

உத்திரபிரதேசம் மாநிலம் உன்னோவா மாவட்டத்தில் சுமேர்பூர் முதன்மை சுகாதார மையத்தில் இருந்து பிகாபூர் சமூக சுகாதார மையத்திற்கு நோயாளியை கொண்டு சென்ற ஆம்புலன்ஸ் ஓட்டுனர் ஒருவர் வாகனம் ஓட்டும்போது தன்னுடைய மொபைல் போனில் ரீல்ஸ் பார்ப்பது மற்றும் பேஸ்புக்கில் வீடியோ பார்ப்பது என பல செயல்களில் ஈடுபட்டுள்ளார். நோயாளியுடன் இருந்தவர் இதனை வீடியோவாக பதிவு செய்து சமூக ஊடகங்களில் பரப்பி விட்டுள்ளார். இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்ததால் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் விரைவில் விசாரணை தொடங்கியுள்ளனர். குற்றம் உறுதி செய்யப்பட்டதால் சம்பந்தப்பட்ட ஓட்டுனருக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என உறுதி அளித்துள்ளன.

நோயாளிகளின் உயிரை காக்கும் நோக்கத்தில் இருக்கும் ஆம்புலன்சில் இவ்வாறான அலட்சியம் நடந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மூலம் அலட்சியமான பணியாற்றல் போன்ற செயல்பாடுகளுக்கு கட்டுப்பாடு அவசியம் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். மக்களின் உயிர் பாதுகாப்பை முன்னுரிமையாகக் கொண்ட அரசு மற்றும் சுகாதாரத்துறை விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதை இந்த சம்பவம் நினைவூட்டுகிறது. தற்போது இந்த வீடியோ இணையத்தில் வெளியாகிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.