தமிழக அரசு விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, உற்பத்தி விலைப்பொருட்களுக்கு கூடுதல் மதிப்பு கிடைக்கும் நோக்கத்தில் புதிய திட்டம் ஒன்று அறிவித்துள்ளது. விவசாயிகளுக்கு இயந்திரத்திற்காக 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளதாக அறிவிப்பொன்று வெளியிட்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் இளைஞர்கள் மற்றும் பெண்கள் சுயஉதவிக் குழுகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின உள்ளிட்ட பல்வேறு பிரிவினர்களுக்கு தொழில் தொடங்க வாய்ப்பாக கருதுகிறது.
சிறு, குறு, ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் பெண் விவசாயிகளுக்கு 50 சதவீதம் வரை மானியம் வழங்கப்பட உள்ளது. பொது விவசாயிகளுக்கு 40 சதவீத வரை மானியம் வழங்கப்படும். ஆதி திராவிடம் மற்றும் பழங்குடியினர் பிள்ளைகளுக்கு விதிகத்தை விட 20 சதவீத கூடுதல் மானியம் பெறுவார்கள். எண்ணை எடுக்கும் செக்கு, தேங்காய் உரிக்கும் இயந்திரம், நெல்லில் உள்ள உமியை நீக்க இயந்திரம், மாவரைக்கும் இயந்திரம், பருப்பு உடைக்கும் இயந்திரம், தேயிலை பறிக்கும் கருவி, மிளகாய் பொடியாக்கும் இயந்திரம், வேர்க்கடலையை தோல் உரித்து கொடுக்கும் இயந்திரம் இவை அனைத்திர்கும் மானிய உதவி வழங்கப்படுகிறது. மானியம் மூலம் இயந்திரங்களை வாங்க விரும்புவோர் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் மேலும் QR கோட் ஸ்கேன் செய்து பணத்தை செலுத்தலாம். ஆகஸ்ட் 19 முதல் செப்டம்பர் 20 வரை குள் விண்ணப்பிக்க வேண்டும்.
தமிழகத்தில் ‘அம்மா மருந்தகங்களில்’ முதலமைச்சர் விஜய்யின் புகைப்படங்களை வைக்க வேண்டும் என்று அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் பாப்புலர்…
கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒட்டுமொத்த…
கர்நாடகாவைச் சேர்ந்த இளம் கிரிக்கெட் வீரரான லோகேஷ் அக்ஷய் (39), மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்தபோதே திடீரென ஏற்பட்ட மாரடைப்பு காரணமாக…
விசிக கட்சியின் முக்கிய நிர்வாகியும் மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ஆளூர் ஷா நவாஸ் திமுகவில் இணையவுள்ளதாக சமூக வலைதளங்களில் ஒரு…
தமிழக வருவாய்த் துறை அமைச்சர் K. A. செங்கோட்டையன் காய்ச்சல், வாந்தி மற்றும் மயக்கம் காரணமாக கோவையில் உள்ள ஒரு…
கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து அதிகரித்து வருவதால், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்துவது தவிர்க்க முடியாத ஒன்று என்று…