Categories: சினிமா

விஜயகாந்த் ஆபிஸ்ல நல்லா சாப்பாடு போடுவாங்க, ஆனா சம்பளம் மட்டும்… ஓபனாக பேசிய இயக்குனர் செல்வமணி..

Spread the love

தமிழ் சினிமாவில் 80 களிலும், 90 களிலும் மிகப்பெரிய ஆக்‌ஷன் ஹீரோவாக வலம் வந்தவர் விஜயகாந்த். அவர் நடித்த ஊமை விழிகள், கேப்டன் பிரபாகரன், புலன் விசாரணை, வானத்தைப் போல, சின்னக்கவுண்டர் மற்றும் ரமணா உள்ளிட்ட படங்கள் எல்லாம் பிளாக்பஸ்டர் ஹிட்களாக அமைந்தன.

80 களின் இறுதியில் ஆக்‌ஷன் ஹீரோவாக மாறிய விஜயகாந்த் அதன் பின்னர் தொடர்ந்து ஆக்‌ஷன் படங்களாகவே நடித்துத் தள்ளினார். இந்த காலகட்டத்தில்தான் அவர் அதிகமாக பிலிம் இன்ஸ்ட்யூட் மாணவர்கள் இயக்கத்தில் அதிகமாக படங்களில் நடித்தது.

அப்படி திரைப்பட கல்லூரி மாணவராக இருந்து விஜயகாந்த் மூலமாக இயக்குனராக அறிமுகம் ஆனவர்தான் செல்வமணி. அவர் இயக்கிய புலன் விசாரணை திரைப்படம் 9 தோல்வி படங்களுக்கு பிறகு விஜயகாந்துக்கு ஒரு சூப்பர் ஹிட் வெற்றிப் படமாக அமைந்தது. இந்த படத்தின் வெற்றியால் மோஸ்ட் வாண்டட் இயக்குனராகியுள்ளார் செல்வமணி.

இதையடுத்து அவரை அழைத்து மணிரத்னத்தின் அண்ணன் ஜி வெங்கடேஸ்வரன் அடுத்த படத்தை இயக்கும் வாய்ப்பு கொடுத்துள்ளார். அந்த படத்துக்கு 25 லட்சம் ரூபாய் சம்பளமாக பேசியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சியாகியுள்ளார் செல்வமணி. ஏனென்றால் அவர் இயக்கிய புலன் விசாரணை படத்துக்கு அவருக்கு சம்பளமே 14 ஆயிரம் ரூபாய்தானாம்.

இதையடுத்து சந்தோஷத்தின் உச்சத்தில் மிதந்த அவருக்கு இப்ராஹிம் ராவுத்தரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. அடுத்த படமும் நாமே பண்ணலாம் என சொல்லியுள்ளார். அவரிடம் ஜிவியிடம் அட்வான்ஸ் வாங்கியுள்ளேன் எனக் கூறியுள்ளார். அதை திருப்பி கொடுத்துவிடு நாம்தான் அடுத்த படம் பண்ணுகிறோம் எனக் கூறியுள்ளார். அந்த படம்தான் கேப்டன் பிரபாகரன். அந்த படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் 25 ஆயிரம் ரூபாய்தானாம்.

இதுபற்றி பேசிய செல்வமணி “விஜயகாந்த் ஆபிஸ்ல நல்லா சாப்பாடு போடுவாங்க. கார் வசதி எல்லாம் செய்து கொடுப்பாங்க. ஆனா சம்பளம் கம்மிதான். அது நம்மவீடு மாதிரிதான்” எனக் கூறியுள்ளார். ஆனாலும் விஜயகாந்த் தனக்கு முதல்படம் கொடுத்த காரணத்தால் அந்த நன்றிக் கடனுக்காக குறைந்த சம்பளத்திலேயே கேப்டன் பிரபாகரன் இயக்கியுள்ளார்.

vinoth

Recent Posts

ஒரு கிராம் விஷம் இத்தனை ஆயிரமா…? அரிய வகை பாம்புகளை வளர்த்து உலகையே திரும்பிப் பார்க்க வைத்த கின்… வியக்க வைக்கும் சம்பவம்…!!

சீனாவின் குவாங்ஸி மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான கின் என்ற பெண், சுமார் 60,000 விஷப் பாம்புகளை வளர்த்து ஆண்டுக்கு…

9 minutes ago

“எதுல பாதுகாப்பு அதிகம்…?” டஸ்டர் Vs செல்டோஸ்…. கிராஷ் டெஸ்ட் ரிசல்ட் வெளியீடு…!!

புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…

24 minutes ago

“ஆமா, அது உண்மை தான்”…. விஜய் கொடுத்த ரூ.4 கோடி… உண்மையை உடைத்த தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர்…!

தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…

27 minutes ago

“நீங்க கிளம்புங்க.. போதும்…” அமெரிக்காவுக்கு ‘நோ’ சொல்லும் அரபு நாடுகள்…! வளைகுடாவில் புதுப் பதற்றம்…!!

ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…

31 minutes ago

“90% எங்களுக்குத்தான் ஓட்டு”… “இன்னும் 2 மாசம் தான்.. இபிஎஸ் தான் முதல்வர்”… ரகசியத்தை உடைத்த அன்புமணி.. அதிர்ச்சியில் திமுக…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…

35 minutes ago

“குட்பை ஆப்பிள்…” டிம் குக் விலகல்…. 700 கோடி சம்பளத்தில் வாரிசாக வரும் ஜான் டெர்னஸ் யார்..?

தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…

38 minutes ago