ரொம்ப நன்றி தம்பி… உதவிக்கு டீ போட்டு கொடுத்த பாட்டி…! கண்ணில் மிளகாய் பொடி தூவி மர்ம நபர் செய்த கொடூரம்… நடுங்க வைக்கும் பயங்கர சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 27, 2026

Spread the love

ஈரோடு மாவட்டம் புளியம்பட்டி அருகே உள்ள காயிதே மில்லத் தெருவைச் சேர்ந்தவர் 80 வயதான முத்தம்மாள். கணவர் முத்துசாமி உயிரிழந்த நிலையில் தனியாக வசித்து வரும் இந்த மூதாட்டியின் வீட்டில் சமையல் எரிவாயு தீர்ந்துபோனதால், உதவிக்கு ஆள் தேடியுள்ளார். அப்போது அந்தத் தெருவில் நடந்து சென்ற அறிமுகமில்லாத நபர் ஒருவரை எதேச்சையாக உதவிக்கு அழைத்துச் சிலிண்டரை மாற்றித் தருமாறு கேட்டுள்ளார்.

வீட்டிற்குள் சென்ற அந்த நபரும் சிலிண்டரை மாற்றித் தரவே, செய்த உதவிக்கு நன்றியாக அந்த நபருக்கு முத்தம்மாள் சுடச்சுட டீ போட்டுத் தந்து உபசரித்துள்ளார். ஆனால், மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம்மிட்ட அந்த நபர், சமையலறையில் இருந்த மிளகாய்ப் பொடியை எடுத்துத் தண்ணீரில் கலந்து, திடீரென முத்தம்மாளின் கண்ணில் ஊற்றி அலறவிட்டுள்ளார். கண் எரிச்சலில் மூதாட்டி துடித்த சமயத்தைப் பயன்படுத்தி, அவர் கழுத்தில் இருந்த இரண்டரை பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்துக் கொண்டு அந்த ஆசாமி தப்பியோடியுள்ளார்.

   

கண்ணில் மிளகாய்ப் பொடியுடன் அலறிய மூதாட்டியின் சத்தம் கேட்டு ஓடிவந்த அக்கம் பக்கத்தினர், அவரை மீட்டுப் போலிஸுக்குத் தகவல் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து முத்தம்மாள் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்துள்ள புளியம்பட்டி போலிஸார், முதியவளின் நம்பிக்கையை முதலாக்கி துணிச்சலாக நகைப்பறிப்பில் ஈடுபட்ட அந்த மர்ம நபரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.