“அறைக்குள் நுழைந்து பெண்ணை அச்சுறுத்தி…” பயந்து ஓடியும் விடாமல் துரத்திய மர்ம நபர்…. சோஷியல் மீடியாவில் கொந்தளிப்பை ஏற்படுத்திய பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on புரட்டாதி 24, 2026

Spread the love

ஓயோ ஹோட்டல் ஒன்றிற்குள் சட்டவிரோதமாக அத்துமீறி நுழைந்த நபர் ஒருவர், அங்கிருந்த அறை கதவுகளைத் திறந்து உள்ளே இருந்த இளைஞரிடமும் பெண்ணிடமும் அநாகரிகமாக நடந்துகொண்ட காட்சி இணையத்தில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அச்சமடைந்து ஓயோ ஹோட்டலை விட்டு வெளியே ஓடிய பெண்ணைப் பின்தொடர்ந்து சென்று அந்த நபர் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். எந்தவித அரசு பதவியிலோ அல்லது அதிகாரத்திலோ இல்லாத நபர்கள், இதுபோன்று விடுதிகளுக்குள் நுழைந்து தன்னிச்சையாகச் சோதனை நடத்துவதும் வாடிக்கையாளர்களை மிரட்டுவதும் சட்டவிரோதமான செயலாகும்.

   

சரியான அடையாளச் சான்றுகளை வழங்கி, கட்டணம் செலுத்தி தங்கும் நபர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், இதுபோன்ற சட்டவிரோதச் செயல்களில் ஈடுபட்டு அராஜகம் பண்ணும் நபர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.