எம்ஜிஆரை திருமணம் செய்து கொள்வதற்கு முன்பு ஜானகிக்கு வேறு ஒருவருடன் திருமணம் ஆகி ஒரு மகன் இருந்தார். கணவரைப் பிரிந்து ஜானகி வாழ்ந்தார். அவரது மகன் பெயர் சுரேந்தர். எம்ஜிஆர் உடன் திருமணமான பிறகு சுரேந்தர் அவர்களுடனே வளர்ந்துள்ளார். சுரேந்தர் எம்ஜிஆரை சித்தப்பா என்றுதான் அழைத்துள்ளார்.

எம்ஜிஆர் ஷூட்டிங் செல்லும்போது சுரேந்தரை அழைத்து வாய்ப்பாடை படிக்க கூறுவாராம். மதியம் சாப்பிட வீட்டுக்கு வரும்போது அந்த வாய்ப்பாடை சுரேந்தர் எம்ஜிஆர் இடம் கூறுவாராம். சுரேந்தருக்கு ஏழாவது வாய்ப்பாடுக்கு மேல் தெரியாது. எட்டாவது வாய்ப்பாடு சொல்ல தெரியாதாம்.

அப்போது எம்.ஜி.ஆர் சுரேந்தரை தூக்கி மடியில் உட்கார வைத்து நன்றாக படிக்க வேண்டும். படித்தால் தான் வாழ்க்கையில் முன்னுக்கு வர முடியும் என படிப்பு குறித்து அறிவுரை கூறுவாராம். வேறு ஒருவருக்கு பிறந்தவனாக இருந்தாலும் சுரேந்தர் மீது எம்ஜிஆர் மிகுந்த அக்கறை கொண்டிருந்தார்.

#image_title
ஆயிரத்தில் ஒருவன் படத்தில் கப்பல் காட்சிகளை செட் போட்டு எடுத்துள்ளனர். கப்பல் நீரில் மிதக்கும் போது ஒரு வித அசைவு இருக்கும். அதை எப்படி செட்டில் எடுக்க முடியும் என்று யோசனை செய்துள்ளனர். அப்போது ஒரு பாத்திரத்தில் மண் பானைக்குள் கேமராவை வைத்து நீரில் மிதக்க விட்டு எடுக்கும் யோசனையை சொன்னது சுரேந்தர் தானாம்.
