தமிழ் சினிமாவில் 90களில் உச்ச நட்சத்திரமாக இருந்தவர் தான் நடிகர் பிரசாத். தற்போது முன்னணியில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா மற்றும் விக்ரமை விட பிரசாத்துக்கு அப்போது கிரேஸ் அதிகமாக இருந்தது. ஆண் ரசிகர்களை விட பிரசாத்துக்கு பெண் ரசிகைகள் ஏராளம். தற்போது உச்ச நட்சத்திரமாக இருக்கும் விக்ரமின் உறவுக்காரர் தான் பிரசாந்த். ஆனால் இருவருக்கும் கடந்த சில வருடங்களாகவே பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது.
![]()
ஆனால் பிரசாந்த்துக்கும் விக்கிரமுக்கும் நேரடியாக எந்த பிரச்சினையும் இல்லையாம். விக்ரமின் தந்தைக்கும் பிரசாத்தின் தந்தைக்குமான பிரச்சனை தான் குடும்ப பிரச்சினையாக மாறி உள்ளது. விக்ரமின் தந்தை தான் கில்லி படத்தில் திரிஷாவின் தந்தையாக நடித்திருந்தார். அவர் பரமக்குடியில் இருந்து சினிமா ஆசைக்காக சென்னைக்கு வந்துள்ளார்.

அவரும் பிரசாந்தின் தந்தை தியாகராஜரும் நெருங்கிய நண்பர்கள். அவர் தியாகராஜரின் அக்காவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இது தியாகராஜனுக்கு சுத்தமாக பிடிக்கவில்லை. இருந்தாலும் பெரிய பிரச்சனை எல்லாம் இல்லை என்றாலும் இன்னும் இவர்கள் குடும்பம் பிரிந்து தான் இருக்கிறது. நெருங்கிய உறவினர்களான இவர்கள் குடும்ப பிரச்சினை காரணமாக பிரிந்து உள்ளனர்.
