“காசே இல்லை.. கையை விரித்த அரசு”…. மகளிர் உரிமைத் தொகைக்கு வந்த புதிய சிக்கல்…இல்லத்தரசிகளுக்கு ஷாக் நியூஸ்….!

By Nanthini on ஆனி 20, 2026

Spread the love

தமிழகத்தில் தகுதியுள்ள பெண்களுக்கு தற்போது மாதம் ₹1000 வழங்கப்பட்டு வரும் நிலையில், “அனைவருக்கும் மகளிர் உரிமைத் தொகை” வழங்கும் திட்டம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்று அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்துள்ளார். மாநிலத்தின் தற்போதைய நிதிநிலைமை மோசமாக இருப்பதால், முதலில் அதனைச் சீரமைத்த பின்னரே அனைத்துப் பெண்களுக்கும் இந்தத் தொகையை விரிவுபடுத்த முடியும் என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

தற்போதைய நடைமுறைப்படி, ஆண்டு குடும்ப வருமானம் ₹2.5 லட்சத்திற்குள் இருக்கும் பெண்களுக்கு மட்டுமே இந்த உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தனது தேர்தல் வாக்குறுதியாக 60 வயதுக்கு உட்பட்ட அனைத்துப் பெண்களுக்கும் மாதம் ₹2500 வழங்கப்படும் என அறிவித்துள்ள நிலையில், தற்போதைய அரசின் இந்த நிதிநிலைமை சார்ந்த அறிவிப்பு மக்களிடையேயும் அரசியல் வட்டாரத்திலும் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.