தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் ஒவ்வொரு நொடியும் பரபரப்பாகவே உள்ளது. அனைத்துக் கட்சிகளும் மாற்று கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் தொடர்ந்து தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக அதிமுக பாஜகவுடன் கூட்டணி வைத்துள்ள நிலையில் இந்த முறை வெற்றி வாகை சூட வேண்டும் என்பதற்காக பல வியூகங்களை வகுத்து வருகிறது.
இந்நிலையில் திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் உள்ளிட்ட மாற்று கட்சிகளை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டோர் அதிமுகவில் இணைந்துள்ளனர். சேலம் இல்லத்தில் இபிஎஸ்ஐ நேரில் சந்தித்து அவர்கள், அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். புதிதாக இணைந்தவர்களுக்கு கட்சித் துண்டு போட்டி இபிஎஸ் வரவேற்றார். திருவாரூர் மாவட்ட அமமுக நிர்வாகிகள் பலர் ஏற்கனவே அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
