BREAKING: முன்னாள் மத்திய அமைச்சர் சிவராஜ் பாட்டீல் காலமானார்… அரசியல் பிரபலங்கள் இரங்கல்…!!

By Soundarya on மார்கழி 12, 2025

Spread the love

முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான சிவராஜ் பாட்டீல்(90) வயது மூப்பு காரணமாக காலமானார்.  இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 7 முறை மக்களவை (MP) உறுப்பினராகவும், 2 முறை சட்டமன்ற (MLA) உறுப்பினராகவும் பணியாற்றியுள்ளார்.  1991 முதல் 1996 வரை மக்களவை சபாநாயகராக (Speaker) பதவி வகித்துள்ளார்.  2004 ஆம் ஆண்டில் மத்திய உள்துறை அமைச்சராகப் பொறுப்பேற்றார்.

2008 ஆம் ஆண்டு மும்பையில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலைத் (26/11) தொடர்ந்து, தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். 2010 முதல் 2015 வரை பஞ்சாப் மாநில ஆளுநராகவும், சண்டிகர் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகியாகவும் பணியாற்றியுள்ளார். அவரது அரசியல் மற்றும் பொது வாழ்க்கைப் பங்களிப்பு குறிப்பிடத்தக்கது.