“டெல்லியை உலுக்கிய ‘நீட்’ விவகாரம்… இரவோடு இரவாக கல்வித் துறை செயலாளரை தூக்கியடித்த மத்திய அரசு?”…. நள்ளிரவில் வெளியான அந்த ஒரு அறிவிப்பு….!

Spread the love

‘நீட்’ வினாத்தாள் கசிவு விவகாரம் தேசிய அளவில் பெரும் புயலைக் கிளப்பியுள்ள நிலையில், மத்திய அரசு அதிரடி நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டுள்ளது. மத்தியக் கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி டெல்லியில் தொடர்ந்து போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. அரசின் மீதான விமர்சனங்கள் வலுத்து வரும் சூழலில், மத்தியக் கல்வித் துறைச் செயலாளராகப் பணியாற்றி வந்த மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரி வினீத் ஜோஷி திடீரென அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

1992-ஆம் ஆண்டு மணிப்பூர் கேடர் ஐ.ஏ.எஸ் அதிகாரியான வினீத் ஜோஷி, ஐ.ஐ.டி கான்பூரில் பொறியியல் பட்டமும், ஐ.ஐ.எஃப்.டி-யில் எம்.பி.ஏ பட்டமும் பெற்றவர். தேசிய தேர்வுகள் முகமையின் (NTA) முதல் தலைமை இயக்குநராகவும், சி.பி.எஸ்.இ தலைவராகவும், மணிப்பூர் மாநிலத் தலைமைச் செயலாளராகவும் பணியாற்றி கல்வித்துறையில் நீண்டகால அனுபவம் பெற்றவர். கடந்த 2025 ஜனவரி முதல் மத்தியக் கல்விச் செயலாளராகப் பொறுப்பு வகித்து வந்த இவர், தற்போதைய சர்ச்சைகளுக்கு மத்தியில் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார்.

வினீத் ஜோஷிக்கு பதிலாக மத்தியக் கல்வித் துறையின் புதிய செயலாளராக நரேஷ் கங்க்வார் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் 1994-ஆம் ஆண்டு ராஜஸ்தான் கேடரைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி ஆவார். எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் பிரிவில் பி.டெக், ஐ.ஐ.டி டெல்லியில் எம்.டெக் மற்றும் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர், நிர்வாகத் துறையில் பரந்த அனுபவம் கொண்டவர்.

முன்னதாக ராஜஸ்தான் மாநிலத்தில் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்தின் செயலாளராகப் பணியாற்றியபோது, மாசுக்கட்டுப்பாட்டுக்கான முக்கிய நடவடிக்கைகளைச் செயல்படுத்திப் பெயர் பெற்றவர் நரேஷ் கங்க்வார். தற்போது மத்தியக் கால்நடை மற்றும் பால்வளத் துறையின் செயலாளராகப் பணியாற்றி வந்த இவர், இப்போது நாட்டின் மிக முக்கியத் துறையான கல்வித் துறையை வழிநடத்தும் பொறுப்பை ஏற்றுள்ளார்.

Nanthini

Recent Posts

என் பொண்ணு கூட இருக்கியாடா?… மகளின் காதலனை கதறக் கதற அடித்துக் கொன்ற தந்தை… பெங்களூரில் அரங்கேறிய கோரச் சம்பவம்…!!

பெங்களூரில், கேரளா மாநிலம் பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த 22 வயதுடைய கிரண் என்ற இளைஞர், அதே பகுதியில் வசிக்கும் 19…

18 minutes ago

ஐயோ கொடுமையே… GST பில் கேட்ட உரிமையாளர் மீது தாக்குதல்… பேக்கரி உரிமையாளரை அடித்து நொறுக்கி… JDS நிர்வாகிகள் வெறியாட்டம்… இணையத்தில் வீடியோ வைரல்…!

துருவேக்கெரே KSRTC பேருந்து நிலையம் எதிரே உள்ள கேக் வேர்ல்ட் பேக்கரியில் JDS தலைவர்கள் இருவர் ஈடுபட்ட மோதலில், பேக்கரி…

28 minutes ago

என்னது… இறந்தவர்கள் சாம்பலை சூப்பில் கலந்து குடிக்கிறார்களா?… அதிர்ச்சியூட்டும் பழங்குடியினர்களின் விசித்திர செயல்… இதன் பின்னணி என்ன?…

தென் அமெரிக்காவின் அமேசான் மழைக்காடுகளில் வெனிசுலா மற்றும் பிரேசில் எல்லைகளில் வாழ்ந்து வரும் யனோமாமி பழங்குடி இன மக்கள், இயற்கை…

38 minutes ago

அடச்சீ… 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த… வேன் ஓட்டுநர் போக்சோவில் கைது… பள்ளியில் நேர்ந்த கொடூரம்…!

திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே பள்ளி வேன் ஓட்டுநர் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த சம்பவம் அப்பகுதியில்…

45 minutes ago

திக்… திக்… குடும்பத் தகராறில் மனைவி கத்தியால் குத்திக் கொலை… போலீசில் சரணடைந்த அதிர்ச்சி பின்னணி…!!

சென்னை பாலவாக்கம் பெரியார் நகரைச் சேர்ந்தவர் விவேக் (38). இவருக்கும் முத்து பிரியாவுக்கும் (33) கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு…

56 minutes ago