டெக் மஹிந்திரா நிறுவனத்தின் மீது இளம் பெண் ஒருவர் சென்னை காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். பாவனா என்ற அந்தப் பெண், தனது உடல்நிலை சரியில்லாத காரணத்தால் 13 நாட்கள் விடுப்பு எடுத்தபோது, உடனடியாக பணிக்குத் திரும்புமாறு நிறுவன நிர்வாகம் தொடர்ந்து மின்னஞ்சல்கள் மூலம் தனக்கு மன உளைச்சலும் அழுத்தமும் அளித்ததாகத் தெரிவித்துள்ளார்.
உடல்நலக் குறைவு தொடர்ந்ததால் மீண்டும் விடுப்பு எடுத்த நிலையில், “எத்தனை நாட்கள் தான் விடுப்பில் இருப்பாய்?” எனக் கேட்டு, விரைவாக அலுவலகம் வர நிர்பந்தித்து, எவ்வித காரணமும் இன்றி அவரை பணியில் இருந்து நீக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, அலுவலகத்தில் கழிவறைக்குச் செல்வதற்குக் கூட அனுமதி பெற வேண்டும் என்ற கட்டாயம் இருந்ததாகவும், இதுபோன்ற மோசமான சூழலை வேறு எந்த நிறுவனத்திலும் பார்த்ததில்லை என்றும் அவர் தனது வேதனையைப் பதிவு செய்துள்ளார்.
https://twitter.com/TeluguScribe/status/2080156342149677471/video/1
மென்பொருள் நிறுவனங்களின் நிர்வாகங்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ள அந்த இளம் பெண், பெண் ஊழியர்களுக்கும் குடும்பம் மற்றும் உடல்நலச் சிக்கல்கள் உள்ளன என்பதைப் புரிந்து கொண்டு அவர்களைக் இரக்கமற்ற முறையிலும் கடுமையாகவும் நடத்தக் கூடாது எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் பிரோசாபாத் மாவட்டத்தில், தலித் சிறுமி ஒருவர் கூட்டுப்பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு, அதன்பின் கொல்லும் நோக்கில் கழுத்து அறுக்கப்பட்ட…
அமெரிக்காவில் உயர்கல்வி பயின்று வந்த தெலுங்கானா மாநிலத்தைச் சேர்ந்த 23 வயது மாணவி திடீரென மாயமான சம்பவம் அவரது குடும்பத்தினரிடையே…
குழந்தைகளைக் கண்காணிக்கத் தவறிவிட்டு, அனைத்துத் தவறுக்கும் மற்றவர்கள் மீது பழிபோடும் தற்காலப் பெற்றோரின் பொறுப்பற்ற போக்கு குறித்து சமூக வலைதளங்களில்…
ஏர் இந்தியா விமானத்தில் 6 அடி 8 அங்குல உயரம் கொண்ட நபர் கழிவறையைப் பயன்படுத்தும் போது படும் சிரமங்களை…
வயது வெறும் எண் மட்டுமே என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், 78 வயதான பிரபல மூத்த பாடகி உஷா…
மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…