பட்ஜெட் 2026: தமிழகத்திற்கு ஜாக்பாட்டா? அல்லது ஏமாற்றமா?… நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்புகள் என்னென்ன….?

Spread the love

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட், பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியாகி மக்களிடையே ஏமாற்றத்தையே மிஞ்சச் செய்துள்ளது. குறிப்பாக, இந்த ஆண்டு தமிழ்நாடு உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநிலத்திற்கான முக்கிய உட்கட்டமைப்பு திட்டங்கள் மற்றும் சலுகைகள் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அத்தகைய முக்கிய அறிவிப்புகள் ஏதுமின்றி இந்த பட்ஜெட் மிகச் சாதாரணமாகக் கடந்து சென்றிருப்பதாகப் பொருளாதார வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

பொதுமக்கள் அதிகம் எதிர்பார்த்த வருமான வரிச் சலுகைகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. தனிநபர் வருமான வரி உச்சவரம்பு உயர்த்தப்படும் என்று நடுத்தர வர்க்கத்தினர் ஆவலுடன் காத்திருந்த நிலையில், பழைய வரி விகிதங்களே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், உலகளவில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விண்ணைத் தொட்டு வரும் சூழலில், அவற்றுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், வரி குறைப்பு அல்லது ஜிஎஸ்டி மாற்றங்கள் குறித்து எந்த அறிவிப்பும் இல்லாதது இல்லத்தரசிகளுக்கும், நகை வியாபாரிகளுக்கும் பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது.

தமிழகத்தைப் பொறுத்தவரை, கோவை மற்றும் மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடு மற்றும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை மாநில மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால், சென்னை – பெங்களூரு மற்றும் சென்னை – ஹைதராபாத் இடையேயான அதிவேக ரயில் சேவைகள் குறித்த அறிவிப்புகளோடு பட்ஜெட் நிறுத்திக்கொண்டது. மேலும், கல்வி உதவித்தொகைக்காக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ரூ. 3,548 கோடி மற்றும் ஜல் ஜீவன் திட்டத்திற்கான ரூ. 3,112 கோடி போன்ற நிலுவையில் உள்ள நிதிகளை விடுவிக்க மத்திய அரசு முன்வராதது மாநில அரசின் திட்டங்களுக்குப் பின்னடைவாகக் கருதப்படுகிறது.

வீடு வாங்குவோருக்கான வரிச் சலுகைகள் மற்றும் ரியல் எஸ்டேட் துறைக்கான புத்துயிர் அளிக்கும் திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்புகளும் இம்முறை பூர்த்தி செய்யப்படவில்லை. தொழில்நுட்ப உலகில் அதிகரித்து வரும் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ளச் சைபர் பாதுகாப்பு சார்ந்த அறிவிப்புகள் வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதுகுறித்த மெத்தனப்போக்கும் தெரிகிறது. மேலும், காலநிலை மாற்றத்தைச் சமாளிக்கப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படும் எனச் சூழலியல் ஆர்வலர்கள் நம்பியிருந்தனர், ஆனால் அது தொடர்பான பெரிய நிதி ஒதுக்கீடுகள் இடம்பெறவில்லை.

ஒட்டுமொத்தமாகப் பார்க்கையில், இந்த பட்ஜெட் எவ்விதமான அதிரடி மாற்றங்களும் இல்லாத ஒரு ‘சாதாரண’ பட்ஜெட்டாகவே அமைந்துள்ளது. புதிய வேலைவாய்ப்புகள் மற்றும் பொருளாதார வளர்ச்சியை வேகப்படுத்தும் திட்டங்கள் குறித்துத் தெளிவான வரையறைகள் இல்லாதது இளைஞர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. வரவிருக்கும் தேர்தல்களைக் கருத்தில் கொண்டாவது சலுகைகள் வரும் என்று எதிர்பார்த்த அரசியல் நோக்கர்களும், சாமானிய மக்களும் இந்த பட்ஜெட்டைக் கண்டு பெருத்த ஏமாற்றத்தையே வெளிப்படுத்தியுள்ளனர்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

5 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

5 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

5 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

5 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

6 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

6 மணத்தியாலங்கள் ago